குரங்கின் கைப்பூமாலை
பிச்சாண்டியின் கையில் செங்கோல்
தமிழர்கள் வெகுளியாம் சொன்ன தாரு
தமிழரெலாம் இல்லைவஞ்ச கர்தான் என்றார்
தமிழ்கண்ட மாமுனியும் அன்றே தேடு
தமிழரென்றார் பாரதத்தின் கூட சேர்ந்து
வெள்ளையனை வெளியேற்றி வெற்றி கண்டார்
வெள்ளையனே ஆளவேண்டும் என்றார் அந்த
பெரியாரின் கட்சியினர் வாயால் பேசி
உண்டியலை குலுக்கிவசூல் செய்து தின்ற
அன்றாடங் காய்ச்சிகள்தான் இல்லை என்று
அவர்மறுப்ப ரோசொல்லும் ஆகா ஆகா
தமிழரின்கை ஓட்டெல்லாம் மந்திக் கீந்த
தகாதமாலை கூத்தற்கு தந்து பல்லை
இளித்தபடி நிற்கிறது கஞ்சிக் கில்லா
பிச்சாண்டி கையிலின்று செங்கோல் பாரும்
அச்சமின்றி அட்டூழி யம்செய் மந்தி
ஆட்சிக்கட் டிலில்யேறி ஆடு தாட்டம்
வெகுளியல் லத்தமிழன் இன்று பித்தன்
மதிமயங்கி போதையிலுண் மத்தன் ஆனான்
இதிலிருந்து மீளுவனோ சொல்லும் நீயே