நா விஜயபாரதி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  நா விஜயபாரதி
இடம்:  Chennai
பிறந்த தேதி :  09-Dec-1987
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  05-Apr-2014
பார்த்தவர்கள்:  1185
புள்ளி:  195

என்னைப் பற்றி...

நான் காலத்தால் அழியாத கவிஞர் கண்ணதாசனால் கவிதயாலும் பாரதி கவிதையாலும் ஈர்க்கபட்டு, நா முத்துகுமார் பாடலாலும் ஈர்க்கப்பட்டு கவிதை எழுதும் வாய்ப்பை தமிழ் தாய் எனக்கு தந்தது.

என் படைப்புகள்
நா விஜயபாரதி செய்திகள்
நா விஜயபாரதி - நா விஜயபாரதி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Aug-2017 12:05 pm

என்ன குறை செய்தேனோ
நீதியரை இகழ்ந்தேனோ
இது வரைக்கும் அறியாமல்
இனி நானும் அறிவேனோ

எனை ஆளும் ஈசனடி சேர்வேனா மனமே
நிலையில்லா பிண்டம் இது மனமே அறிவாயா
கடை கண்ணால் அம்பலத்தான் பார்க்க கடவேனா
வழி இருக்கா விதி உண்டோ எப்படி நான் அறிவேன்

மந்திரங்கள் அறியவில்லை வேதங்கள் பயிலேன்
மனம் போன போக்கிளெல்லாம் தினமும் திரிகின்றேன்
மாயவனின் முகம் காண எவ்வழி செல்வேனோ
வழி இருக்கா விதி உண்டோ எப்படி நான் அறிவேன்

எதை தொலைத்தேன் இங்கு வந்தேன் அறிவாயோ மனமே
ஏன் பிறந்தேன் எதை தேடி இங்கு நான் வந்தேனோ
எந்த ஜென்மம் செய்த பிழை எப்படி குறை தீர்ப்பேன்
வழி இருக்கா விதி உண்டோ எப்படி நான் அறிவேன்

மேலும்

அதுவும் உண்மைதான் 29-Aug-2024 8:59 pm
மனிதன் சக மனிதனை தன்னை போல் பார்க்கும் நிலை எப்போது விளையுமா அப்போது தான் இந்தப் பூமிப் பந்து புனிதமாகும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 11-Aug-2017 7:40 pm
நா விஜயபாரதி - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Aug-2024 1:34 pm

அமைதியாக களைப்பாறியது ஒரு செங்கால் நாரை
அங்கு அந்த கிளை அதை சுமக்கும்வரை

மேலும்

நா விஜயபாரதி - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Aug-2024 1:28 pm

திறந்து பார்த்தேன் தெரியவில்லை
எட்டி பார்த்தேன் புரியவில்லை
கொஞ்சம் பழகிபார்த்தேன் மீண்டும் புரியவில்லை
பின் வாழ்ந்து பார்த்தேன் தெரிந்துகொண்டேன் புரிந்துகொண்டேன்

மேலும்

நா விஜயபாரதி - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Aug-2024 1:44 pm

காதல் மர்மமாய் காமத்தில் நுழையும் போது
மேகம் ரகசியமாய் மரங்களை காணும் போது
பருவம் பத்திரமாய் கண்களை களையும் போது
வாசம் வண்ணமாய் இளமையய் கடக்கும் போது
அன்பு அதீதியாய் முதுமையை அடையும் போது
விரல்கள் ஆசையாய் எல்லை மீறும் போது
வருகின்ற வர்ணமே "மழை"...

மேலும்

நா விஜயபாரதி - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Aug-2024 1:34 pm

தொடர்ந்து முயற்சி செய்கிறது மேகங்கள்
மரங்களை காண - ஒருவன்
வெகுவாக வேகமாக வெட்டுகிறான்
மரங்களின் இருப்பிடத்தை.

மேலும்

நா விஜயபாரதி - நா விஜயபாரதி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Jun-2023 7:08 pm

நீயும் நானும் பேசுகின்ற வார்த்தை கேக்குமோ
என்னை எப்படி கண்டுபிடித்தாய்

நீயும் நானும் செல்கின்ற பாதை சொல்லுதோ
இன்னும் எத்தனை தூரம் செல்வாய்

காற்றே கொஞ்சம் நேரம் வீசு என்
காதலி கொஞ்சி பேசட்டும்

பூவே கொஞ்சம் வாசம் காட்டு அவள்
புன்னகை கொஞ்சி தாவட்டும்

மேலும்

நன்றி ஐயா 09-Jun-2023 8:57 pm
நல்ல அழகிய வரிகள் படித்தேன் ரசித்தேன் இளைய கவிஞரே.....வாழ்த்துக்கள் 07-Jun-2023 4:40 am
நா விஜயபாரதி - நா விஜயபாரதி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Sep-2021 3:56 pm

எதற்க்காக தான் அந்த உயிர் நீர்த்ததோ
என் அண்ணனை இங்கு விதி வென்றதோ
புரியாத பாதை அது வாழ்வில் என்றும் என்றும்
நல்லவன் தோற்பதில்லையே என்றாலும்
என் அண்ணனை போல் வருமா?

மேலும்

நீங்கள் சொல்வதும் உண்மைதான் நட்பே. உடல் நலத்திலும் அக்கறை காட்ட முனைவது படைப்பாளிகளுக்கு நல்லது 29-Sep-2021 4:50 pm
உடல் பாதுகாப்பே வாழ்க்கை பாதுகாப்பு. உரிய வகையில் புலன் காத்தல் புடமிடுமே விதியை.. 29-Sep-2021 10:11 am
நா விஜயபாரதி - ராம் குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Sep-2021 1:40 pm

முதலில் ஓர் முத்தம்
இதழின் ஓரம்

இறுதியில்
ஓர் முத்தம்
இதயத்தின் ஓரம்

இடையில் ஏதோ ஓர் சிறு இன்பம் இளையாளின் இடையினில்.....

மேலும்

அருமை தொடருங்கள் 28-Sep-2021 2:58 pm
நா விஜயபாரதி - Tinesh Kumar அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-Aug-2017 9:43 pm

தூக்கத்தில் மட்டுமே
கனவுகண்டு கொண்டிருந்த ஏனை
தூக்கத்தையே கணவாய்
காணும் அளவிற்கு உழைக்க
ஊக்குவித்த உன்னதமே!

எண்பது வயது இளமையை!

உன் அக்னி சிறகுகளால்
வருடப்பட்ட வாலிபன் நான்!

பணத்திற்காக அறிவியலை
அரசியலாகிய பனாதிபதிகளின் இடையே
ஜனத்திற்காக அரசியலை
அறிவியலாகிய ஜனாதிபதி நீ!

இந்தியர் வீரத்தை
உலகிற்கு பறைசாற்றியது
உன் ஏவுகணைகள்!

மக்கள் மனதில்
மறுமலர்ச்சி தந்தது
உன் பேச்சுக்கணைகள்!

எளிமைக்கு எடுத்துக்காட்டாய்
எட்டுத்திக்கும் ஒலித்தது
உன் வாழ்க்கைமுறை!

உமது கனவுகளை
இலட்சியங்கள் ஆக்கிக்கொண்டது
என் தலைமுறை!

இல்லற வாழ்வின்
இன்பம் நீத்த உனக்கு
ஒவ்வொரு இளைஞ்ரும்

மேலும்

ஆம் அண்ணா! 28-Aug-2017 9:21 am
தமிழ் மண்ணில் புதைக்கப்படவில்லை! தமிழர் மனதில் விதைக்கப்பட்டுள்ளாய்!! இது தான் அவருக்காக நாம் செலுத்தும் மரியாதை 23-Aug-2017 9:49 pm
நா விஜயபாரதி - ராஜ் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
22-May-2015 2:31 pm

இரண்டு நாட்களுக்கு முன், நான் எனது நண்பர்களுடன் தேநீர் கடையில் நின்றுகொண்டு தேநீர் அருந்திகொண்டிருந்தேன். அப்போது அங்கு வந்த ஒரு வயதான பெரியவர், ஏதாவது காசு இருந்தா கொடுங்கள் என்றார். எனக்கு மனமில்லை என்றாலும் சரி ஒரு 5 ரூபாய் கொடுப்போமே என்று சொல்லி என்னுடைய பணப்பையை எடுத்தேன். என் நண்பன் எனது கையை பிடித்து கொடுக்காதே என்றான். ஏன்டா என்று கேட்பதற்குள், அந்த பெரியவரிடம் எதாவது சாப்பிடுகிறீர்களா என்று கேட்டான். எனக்கு போண்டா வாங்கி தருவீர்களா என்று மகிழ்சியுடன் கேட்டார் அவர். அவனும் 3 போண்டக்களை (...)

மேலும்

நன்றி நண்பரே.. 22-May-2015 5:44 pm
உண்மை ..நெகிழ்ச்சியான எண்ணம் .. 22-May-2015 3:25 pm
நா விஜயபாரதி - நா விஜயபாரதி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-Feb-2015 10:38 am

தேடாத இடமில்லை
நான் காண போய்டேன்
கல்லுக்குள் இருக்கேனா இல்லை
மண்ணுக்குள் இருக்கேனா இல்லை
பூவுக்குள் இருக்கேனா இல்லை
பாடைக்குள் இருக்கேனா என்று தெரியவில்லை எனக்கு
ஏனெனில் எத்தனையோ பாத்துட்டேன்
ஆனா ஒருத்தி கூட திரும்பி பாக்கள.
ஆடோவுல போனா டயர் வெடிக்குது
சீட்ல உக்காந்த முள்ளு குத்துது
படுத்தா கனவு தொறத்துது
பேசினா பேய் போல கோவம் வருது
ஆகா மொத்ததுல சைகோ வா ஆயிட்டேன் நானு.

மேலும்

நா விஜயபாரதி - நா விஜயபாரதி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
18-Apr-2014 9:02 am

தாயின் கருவிலே மலர்ந்தோம்

நாம் தாயின் கருவிலே வளர்ந்தோம்

நாம் தாயின் மடியிலே பிறந்தோம்

நாம் தாயின் மடியிலே தவழ்ந்தோம்

நம் பார்வை உணர்ந்த முதல் முகம் தான்

அவள் "அம்மா" என்றுதான் உணர்ந்தோம்.

நம் உதடு சொல்லும் முதல் வார்த்தை
அவள் "அம்ம்மா" என்றே அறிந்தோம்.

அம்மாவின் அன்புக்கு எல்லை இல்லை.

அம்மாவின் பாசத்தில் சூழ்ச்சி இல்லை.

அம்மாவுக்கு நிகர் யாருமில்லை...............

அதிலும் தமிழ் நாட்டு அம்மாவுக்கு தான் மகனே உயிர் தான் மகனே உயில்

"என்ன நண்பர்களே இது உண்மைதானே"

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (46)

நன்னாடன்

நன்னாடன்

நன்னாடு, விழுப்புரம்
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
கிரண் ராஜ்

கிரண் ராஜ்

சென்னை
user photo

யோகபாலாஜி க

அலங்காநல்லூர்

இவர் பின்தொடர்பவர்கள் (50)

இவரை பின்தொடர்பவர்கள் (46)

அகர வெளி

அகர வெளி

தமிழ்நாடு
குமரேசன் கிருஷ்ணன்

குமரேசன் கிருஷ்ணன்

சங்கரன்கோவில்
மேலே