ஏக்க மாலை 2

என்ன குறை செய்தேனோ
நீதியரை இகழ்ந்தேனோ
இது வரைக்கும் அறியாமல்
இனி நானும் அறிவேனோ

எனை ஆளும் ஈசனடி சேர்வேனா மனமே
நிலையில்லா பிண்டம் இது மனமே அறிவாயா
கடை கண்ணால் அம்பலத்தான் பார்க்க கடவேனா
வழி இருக்கா விதி உண்டோ எப்படி நான் அறிவேன்

மந்திரங்கள் அறியவில்லை வேதங்கள் பயிலேன்
மனம் போன போக்கிளெல்லாம் தினமும் திரிகின்றேன்
மாயவனின் முகம் காண எவ்வழி செல்வேனோ
வழி இருக்கா விதி உண்டோ எப்படி நான் அறிவேன்

எதை தொலைத்தேன் இங்கு வந்தேன் அறிவாயோ மனமே
ஏன் பிறந்தேன் எதை தேடி இங்கு நான் வந்தேனோ
எந்த ஜென்மம் செய்த பிழை எப்படி குறை தீர்ப்பேன்
வழி இருக்கா விதி உண்டோ எப்படி நான் அறிவேன்

எழுதியவர் : சிவனடியேன் (11-Aug-17, 12:05 pm)
பார்வை : 114

மேலே