விதை விருட்சமாகும் - ஏபிஜெஅப்துல் கலாம்

தூக்கத்தில் மட்டுமே
கனவுகண்டு கொண்டிருந்த ஏனை
தூக்கத்தையே கணவாய்
காணும் அளவிற்கு உழைக்க
ஊக்குவித்த உன்னதமே!
எண்பது வயது இளமையை!
உன் அக்னி சிறகுகளால்
வருடப்பட்ட வாலிபன் நான்!
பணத்திற்காக அறிவியலை
அரசியலாகிய பனாதிபதிகளின் இடையே
ஜனத்திற்காக அரசியலை
அறிவியலாகிய ஜனாதிபதி நீ!
இந்தியர் வீரத்தை
உலகிற்கு பறைசாற்றியது
உன் ஏவுகணைகள்!
மக்கள் மனதில்
மறுமலர்ச்சி தந்தது
உன் பேச்சுக்கணைகள்!
எளிமைக்கு எடுத்துக்காட்டாய்
எட்டுத்திக்கும் ஒலித்தது
உன் வாழ்க்கைமுறை!
உமது கனவுகளை
இலட்சியங்கள் ஆக்கிக்கொண்டது
என் தலைமுறை!
இல்லற வாழ்வின்
இன்பம் நீத்த உனக்கு
ஒவ்வொரு இளைஞ்ரும்
கடமைப்பட்டுள்ளோம்
தந்தையே!
நீ...
தமிழ் மண்ணில் புதைக்கப்படவில்லை!
தமிழர் மனதில் விதைக்கப்பட்டுள்ளாய்!!