எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இரண்டு நாட்களுக்கு முன், நான் எனது நண்பர்களுடன் தேநீர்...

இரண்டு நாட்களுக்கு முன், நான் எனது நண்பர்களுடன் தேநீர் கடையில் நின்றுகொண்டு தேநீர் அருந்திகொண்டிருந்தேன். அப்போது அங்கு வந்த ஒரு வயதான பெரியவர், ஏதாவது காசு இருந்தா கொடுங்கள் என்றார். எனக்கு மனமில்லை என்றாலும் சரி ஒரு 5 ரூபாய் கொடுப்போமே என்று சொல்லி என்னுடைய பணப்பையை எடுத்தேன். என் நண்பன் எனது கையை பிடித்து கொடுக்காதே என்றான். ஏன்டா என்று கேட்பதற்குள், அந்த பெரியவரிடம் எதாவது சாப்பிடுகிறீர்களா என்று கேட்டான். எனக்கு போண்டா வாங்கி தருவீர்களா என்று மகிழ்சியுடன் கேட்டார் அவர். அவனும் 3 போண்டக்களை வாங்கி கொடுத்தான். அவரும் சாப்பிட்டுவிட்டு நன்றி சொல்லிவிட்டு மகிழ்ச்சியாக சென்றார்.
அவர் சென்றவுடன் அவனிடம் கேட்டேன், ஏன்டா அவருக்கு காசு கொடுக்காம எதாவது சாப்டுரீங்கலன்னு கேட்டே?
நீ கொடுக்கும் 5 ரூபாயை வைத்து அவர் என்ன செய்வரோனு தெரியாது. அனால் அவரை சாப்பிட வைத்த திருப்தி நமக்கு இப்போது இருக்கிறதே என்றான்.
எனக்கும் அப்போது புரிந்தது. ஒருவரை சாப்பிட வைப்பதால் நாமும் மகிழ்ச்சியாக இருக்கலாமே என்று..

பதிவு : ராஜ்
நாள் : 22-May-15, 2:31 pm

மேலே