அரசியல் கட்சித் தலைவரின் கோபம்

ஒரு குட்டி அரசியல் கட்சியின் தலைவரிடம் அவரது கட்சியில்

புதிதாகச் சேர்ந்த இளைஞர் ஒருவர்:

அண்ணே நீங்க எங்க போனாலும் உங்களைச் சுற்றி நூறு


மேற்பட்ட இளைஞர்கள் நிற்கிறார்கள். எல்லாம்

பார்த்த முகங்களாத் தெரியுது. அது எப்படி அண்ணே?


@@@@@@@@


நிதி திரட்டறதே அதுக்குத் தான்.


@@@@@@@@@@@


திரள் நிதி?


@@@@@@@@@@@@


அது என்னோட கணக்கில் சேரும்.


@@@@@@@@@@@@

தேர்தல் செலவு?


@@@@@@@@@@@@


அது போட்டி போடறவங்க செய்ய வேண்டிய செலவு.


@@@@@@@@@@@

விண்ணப்பத்துக்கு வசூல் பண்ணற பணம்?


@@@@@@@@@@@@

அதுவும் என் கணக்கில் சேரும்.

@@@@@@@@@

உங்க காருக்கு ஆகும் செலவு, நீங்கள் தங்கும் நட்சத்திர விடுதிச் செல்வு?

@@@@@@@@@@


அந்தந்த ஊர் செயலாளர் கணக்கில் சேரும்.


@@@@@@@@@@@@


அண்ணே நானும் ஒரு கட்சி ஆரம்பிச்சு உங்களை மாதிரி பணம்


சம்பதிக்கலாம்னு பார்க்கிறேன்,


@@@@@@@@@@@@@@@@


யார்டா நீ என்னையே கேள்வி கேட்கிறவன்? . இன்னும் கொஞ்ச

நேரம்,இங்க நீ இருந்தா என் பாதுகாவலர்கள் உன்னை நார்

நாராய்க் கிழிச்சுத் தொங்கவிட்டுருவாங்க, ஓடிப் போடா நாயே.

எழுதியவர் : மலர் (22-Sep-24, 6:34 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 34

மேலே