வெறும் லிங்கமா

வெறும் லிங்கமா?
@@@@@@@

நம்ம கட்சில சேர வந்த ஆளை அழைச்சிட்டு



வாய்யா.

@@@@@@

தலைவர் உங்களைக் கூப்படறாருங்க.

@@@@@

வணக்கம் ஐயா.


@@@@@@@

உன் பெயர் என்ன தம்பி? எந்த


ஊரிலிருந்து வருகிறாய்?


@@@@@

ஐயா, என் பெயர் லிங்கம். மாநில அளவில்


சிறந்த பேச்சாளர் என்ற பரிசை பலமுறை


பெற்றிருக்கிறேன். தங்கள் கட்சியில்


செய்தித் தொடர்பாளர் பதவிகள்

இருப்பதாகக் கேள்விப்பட்டேன். அதுதான்


தங்களை நேரில் சந்திக்க வந்தேன்.


காஞ்சிபுரம் என் சொந்த ஊர்.

@@@@@@@

சரி தம்பி, உன் பேரு என்னன்னு


சொன்னாய்?

@@@@@@@@

லிங்கம்.

@@@@@@

தம்பி நீ சிறந்த பேச்சாளர்னு சொன்னாய்.


வாழ்த்துக்கள். நீ வெறும் 'லிங்கம்'‌ ஆக

எங்கள் கட்சிக்கு வந்தா நல்லா இருக்காது.

உன்னுடைய பெயரை 'காஞ்சிலிங்கம்'

என்று மாற்றிக்க. நீ கலந்து கொள்ளும்

முதல் தொலைக்காட்சி விவாத்திலேயே

ஒரு கலக்கு கலக்கி உலகத

தமிழருக்கெல்லாம் தெரிந்த பேச்சாளர்

ஆவாய்.

சிறப்பாக பொய் பேச, வதந்தியைப் பரப்ப

போலி

ஆதாரங்களைத் தயாரித்து அதுபற்றி

அவதூறு பரப்ப ஒரு வாரம் சிறப்பு பயிற்சி

உனக்கு அளிக்கப்படும். உன்

திறமைக்கேற்ற ஊதியம் ஆயிரங்களில்


ஏறிக்கொண்டே இருக்கும்.

@@@@@

மிக்க நன்றி ஐயா.

@@@@@

டேய் கணபதி இங்க வாடா.

காஞ்சிலிங்கத்துக்கு ஐந்தாவது மாடியில்

ஒரு ஏசி அறையை ஒதுக்கி, அவருக்கு

வேண்டிய வசதிகளைச் செய்து கொடு.

@@@@@@

சரிங்க ஐயா.

எழுதியவர் : மலர் (26-Sep-24, 5:23 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 47

புதிய படைப்புகள்

மேலே