மரணத்தின் பீதியில் மனிதம் தன் மாண்புகளை இழந்துக்கொண்டிருக்கிறது - சி எம் ஜேசு

மரணத்தின் பீதியில் மனிதம் தன்
மாண்புகளை இழந்துக்கொண்டிருக்கிறது
---------- சி .எம் .ஜேசு பிரகாஷ் 2020 --------------

வாழ்வை கடத்தும் மனிதம் வீழ்வை நினையாது
இவ்வையகம் முழுவதும் பரவியிருந்த வேளையில்

புதிய நோயாகி பதியும் தொற்றாகி
மனிதத்தை தோற்கடிக்கும் கொரோனா ஒருபுறமிருக்க

எங்கே - தனக்கு வந்துவிடுமோ என
அஞ்சி நடுங்கி அஞ்சடிக்கும் தள்ளி நின்று
கூட்டத்தைக் கலைக்க முயலும் காலம் மறுபுறம்

பசியால் பட்டினியால்
கவலையால் கனவுகளோடு காலம் முழுமைக்கும்
வறுமையில் வாடுவோர் கதி இங்கே அதோ கதி என
ஆகிப்போகும் நிலை காணாய் காலமே

மனிதனின் மதியாமையால்
ஏற்படுத்தும் சட்டங்கள் இங்கே இல்லை
மாறாக ஏற்கனவே இருக்கும் சட்டத்திற்குள்
சிக்கவைக்கும் முயல்வையே இக்காலம் செய்துகொண்டிருக்கிறது

கையெறி குண்டும் கைத்தடியும் தாங்கி
இரும்பு வாகனமும் கண்ணீர் புகை படையும் சூழ

ஒன்றுமில்லா மனிதனை உண்டுஇல்லாமல்
ஆக்கும் செயல் படைக்கும் காலம் இது எனும் அளவுக்கு உலகம் கலகமாகி
அமைதியிழந்து விட்டதோ என எண்ணம் நமக்கு பிறக்கிறது

தாளில் முத்திரைக்குத்தும் பழக்கம் மாறி
காலிலும் கையிலும் முத்திரைகளிடும் அளவிற்க்கு
மனிதன் வெறும் தாளாகிபோனானோ

உலகமே இது பொய்யடா மனித உருவம்
வெறும் காற்றடைத்த பையடா எனும் கூற்றுக்கு ஏற்ப
இக்காலம் ஆகிவிட்டது என்பதில் ஐயமில்லை

காலங்கள் மாறி கோலங்களும் மாறிப்போச்சு
நாளும் நிம்மதி இழக்கிறான் மனிதன்
கலாச்சாரங்கள் மாறிப்போனது
கருணையற்று சாட்டையான சங்கடங்களால்

இல்லை கடவுள் எனும் அளவிற்கு கடவுளுக்கே நோய்
தொற்று இருக்கிறதா என அலசி விளாசி பார்க்கும் காலம்

வருமுன் காப்போம் எனும் வேதாந்தம் தான் நமக்கு
வேதனைகளை அள்ளிக் கொட்டுகிறது

தோழன் தோழி இல்லா கனவாகி
குழு ஊக்கம் மறந்து தனித்திருந்து வாழ்ந்து பார்க்கும்
காலத்தை கொணர்ந்திருக்கும் கொள்ளை நோய்

இது அடித்தலையும் தொலைத்தலையும் அதிகமாக்கி
பிடித்தலையும் இடித்தலையும் இன்பமாக்கி பார்க்கநினைக்கும் காலம்
அகப்பட்டவரெல்லாம் அமைதியிழந்து போவார்கள் கவனம் தேவை

வலைதளங்களிலே உலா வரும் செய்திகளெல்லாம்
வாயடைத்து விழிபிதுங்கி நிற்கும் வேதனைகளை தந்துக்கொண்டிருக்கிறது

கூலித்தொழிலாளிகளின் வாழ்வு என்னாவது
அரசுசாரா அமைப்புகளின் கதி என்னாவது

கலைகளிலும் சிலைகளிலும் சிந்தனைப்பதித்து வாழும்
கலைஞர்களின் வாழ்வின் கதி தான் என்னாவது

உலகம் ஒரே உலகமாகி இருந்தால் கலகங்கள் வராதே
உலகம் தனித்தனிப்படைகளாகி மானை வீழ்த்தச்செல்லும் கூட்டம் போல

கொள்ளை நோயின் அறிகுறி தெரிந்திட
அலைமோதும் இன்னலுக்குள்ளாகி மனிதத்தை வதைக்கிறது இக்காலம்

வானத்து பறவைகளைக் கண்ணூற்றேன் எந்த பறவைக்கும் இந்த
கொள்ளை நோயின் தாக்கங்கள் இருப்பதாகத் தெரியவில்லை

மனிதம் மற்றும் ஏன் அலைக்கழிக்க படுகிறது - வேதனை
பொறுத்திருந்து பார்ப்போம் புரிந்துணர்வின் சக்தி
எத்தனை மனிதரை விட்டுவைக்கிறது என்று காண்போம்

அலைபாயும் மனதுடன் அடங்கா மக்களின் துயருடன்
விலையில்லா மனிதத்திற்க்காக என் வார்த்தைகளின் தேடல் இது

சி .எம் .ஜேசு பிரகாஷ் - சென்னை

எழுதியவர் : சி .எம் . ஜேசு (24-Mar-20, 8:03 pm)
பார்வை : 77

மேலே