நான் வேண்டும் அரசியல் - சி எம் ஜேசு
ஊழல் களைந்து உழைப்பை மதித்து
நன்மைப் பரப்பும் அரசியல் வேண்டும்
உண்மைப் பேசி குறைகள் கூறாமல்
நிறைகள் செய்யும் அரசியல் வேண்டும்
நெஞ்சை நிமிர்த்தி வீரம் பேசாமல்
அன்பைப் பொழியும் அரசியல் வேண்டும்
பண்பை மதித்து பக்குவங்கள் செய்ய - தன்
உயர்வை விரும்பா அரசியல் வேண்டும்
தீமைகள் கண்டு அதன்தீவிரங்கள் கண்டு
குற்றங்கள் குறைக்கும் அரசியல் வேண்டும்
கலைகள் வளர்த்து கவிதைகள் புனைந்து
தமிழை வளர்க்கும் அரசியல் வேண்டும்
தங்கம் மறந்து பசியைப் போக்கும்
விவசாயம் செழிக்கும் அரசியல் வேண்டும்
நாகரீகம் நன்மை என்றாலும் - நம்
பாரம்பரியம் வளர்க்கும் அரசியல் வேண்டும்
முழுதும் தமிழாய் முழங்குவாய் தோழா எனும்
மூர்ச்சை தாங்கிய உடலான அரசியல் வேண்டும்
இன்னும் வேண்டும் நன்மை நிறைக்கும்
நான் வேண்டும் அரசியல் வேண்டும்

