என் உயிர் தேசம்

என் உயிர் காற்றின் வாசம்
அன்னை மண்ணிலேயே விசும்
அள்ளி அணைத்திட்ட பாசம்
ஆள் கடல் அடியினிலும் பேசும்
அழகான தேசமே ~நீ
அழலாமா?...
அழியாத கோலமும் வரலாமா?

நாளை வருவேன்
நானே தருவேன்...
நன்றி கடனுக்காக இல்லை
என் தாய் மண்ணுக்காக....
வருவேன் தாயே தயங்காதே
தருமம் வெல்லும் கலங்காதே
இன்று நான் காத்திருக்கின்றேன்
என்றும் உன்னையே பார்த்திருப்பேன்
இருந்தாலும் உன்னுடனே
இறந்தாலும் உன்னுடனே.........

எழுதியவர் : "கவியிண்பன்" சஜீவன் (7-Dec-14, 5:59 pm)
Tanglish : en uyir dhesam
பார்வை : 133

மேலே