மூன்று பெரியவர்கள்
அது ஒர் ஜமீன் குடும்பம். கோட்டை போன்ற வீடு, கூட்டுக் குடும்பம்.
மொத்தம் ஐம்பது பேர் அந்தக் கோட்டை வீட்டில் வசிக்கிறார்கள்.
கட்டுப்பாடான பாரம்பரியம் மிக்க குடும்பம். ஆயிரம் ஏக்கர்
நன்செய் நிலம். வங்கிகளில் கோடிக்கணக்கில் பணம்.
அந்த ஜமீன் குடும்பத்தின் தலைவர் செல்வப் பெருவள
ராஜா. அவரை அந்த ஜமீன் குடும்பத்தினரும் அவர்களது
பண்ணையில் வேலை செய்யும் ஆயிரம் குடும்பங்களில்
உள்ளவர்களும் 'பெரிய பெரியர்வர் ஐயா' என்று தான்
சொல்வார்கள்.
அவரது மூத்த மகன் செந்தில் அரசு ராஜவை
'பெரியவர் ஐயா' என்று அழப்பார்கள்.
பெரிய பெரியவரின் பேரன் முத்துமணி ராஜா. 'சின்னப்
பெரியவர் ஐயா' என்று அழைப்பார்கள்.
ஐயாயிரம் மக்கள் வாழும் அந்த ஊரில் கோயில் திருவிழா,
கலை நிகழ்ச்சிகள் எதுவாக இருந்தாலும் மூன்று பெரியவர்களின்
அனுமதியும் வாழ்த்தும் பெற்ற பின்னரே நடைபெறும்.
அந்த ஜமீன் குடும்பத்தின் பிள்ளைகள் மற்றும் அந்த ஊர்
மக்களின்
பிள்ளைகள் அனைவரும் கல்வி கற்க ஒரு பள்ளி மற்றும் ஒரு
கல்லுரியையும் நடத்துகிறார்கள். எல்லொருக்கும் கட்டண்மில்லாக்
கல்வி. பக்கத்து ஊர்களில் இருந்து வந்து அங்கு படிக்கும்
வசதியான கும்பக்களைச் சேர்ந்த மாணவர்களிடம் மட்டுமே
கட்டணம் வசூலித்தார்கள். மொத்தத்தில் ஜமீன் குடும்பம்

