மலை அழகிகள் முகில்களை கவர்ந்திழுக்கிறார்கள்
மலை அழகிகள் முகில்களை கவர்ந்திழுக்கிறார்கள்
பச்சை நிற
போர்வையை இறுக்க
போர்த்தி
தன் உடல்
எடுப்பை காட்டி
வானத்தை பார்த்து
மோகன சிரிப்புடன்
முகில்களை
இழுக்க முயற்சிக்கிறார்கள்
இந்த மலை
அழகிகள்
வானத்தில் சுற்றி
திரிந்த மேகங்கள்
இவர்களின் அழகில்
சிந்தை தடுமாற
கீழிறங்கி
அவர்கள் மேல்
கவிழ்ந்து கொண்டவர்கள்
சற்று நேரத்தில்
களைத்து இளைத்து
காற்றுடன் கலந்து
வானத்துக்கே சென்று
விட
அவர்கள்
விட்டு சென்ற
மோக நீர்
ஆறுகளாய்
மலை அழகிகளின்
இடைகளில்
கிச்சு கிச்சு மூட்டியபடி
சுழிப்புகளை காட்டி
உற்சாகமாய் ஓடி
கொண்டிருக்கின்றன