இயற்கை வளம் 8

====================
அறிவற்ற வர்கள் அரிகின்றக் காட்டைச்
செறிவுள்ள தாக்கிச் சிற.71
*
சிறப்பெல்லா முண்மைச் சிறப்பன்று பூமி
வறட்சியில் வாடும் பொழுது.72
*
பொழுது புலர்ந்து புவிமாந்தர் நாளும்
தொழுமியற்கை நீக்கும் துயர்.73
*
துயரற்ற வாழ்வு தொடர்ந்தென்றும் வாழ
பயனுள்ள வற்றைப் படை.74
*
படைத்திட்ட தெய்வம் பிரமித்து நிற்கத்
துடைத்திடு வான்கொண்ட மாசு.75
*
மாசற்றக் காற்றை மரமிங்கு தந்தாலே
நாசங்கள் இல்லை நமக்கு.76
*
நமக்கியற்கை வள்ளலென நல்கிய வற்றை
அவமதித் தலில்லை அறம்.77
*
அறமென்ப தொன்றை அறிவிக்கத் தானே
மரமீ யுதிங்கு மகிழ்ந்து.78
*
மகிழ்ந்தீயும் காட்டு மரம்போல விண்ணில்
முகிலீயும் செல்வம் மழை.79
*
மழையென்ப தின்று மகிழ்ந்தூற்றும் போதும்
பிழையாச்சு மக்கள் பிழைப்பு.80
*
தொடரும்.....
**
மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (6-Jan-20, 2:27 am)
பார்வை : 235

மேலே