காதல் பரிசு 💞

காதல் பரிசு💞

போரில் வெற்றி வாகை சூடிய எனக்கு என்ன பரிசு தரபோகிறாய்.
கண் இமைக்காமல் காத்திருந்தேன் தங்ளுக்காக.
என்னையே தருகிறேன்
போரில் வென்ற உங்களுக்காக.
கற்பனைக்கு எட்டா அழகோவியமே!
என் காதல் தேவதையே!
என் சிம்மாசத்தை அலங்கரிக்கபோகும் இளவரசியே!
உன் பதில் என்னை புல்லரிக்க வைக்கிறது.
பாவை நான் பகுந்தறிந்த நாள் முதல் நான் பார்த்த வீர ஆண் மகன் நீ அல்லவோ!
போரில் புறமுதுகு காட்டாமல் எதிரிகளை உன் வீர வாள் சுழட்டி வெற்றி வாகை சூடிய உனக்கு நான் இல்லாமல் வேறு யார் துணை.
ஆஹா! உன் வீரம் சொரிந்த வார்த்தைகள் வில் வித்தை செய்கின்றன.
என் போல் வீரனுக்கு இன்னும் ஊக்கம் பல தருகின்றன.
தமிழ் பால் குடித்து வளர்ந்த காளையே!
களத்தில் உன் வீரம் தனை கண்டேன்
உன் உயிரை துச்சமென மதித்து எதிரிகளை நீ பந்தாடிய விதம்
அப்பப்பா! பார்க்க, பார்க்க ஆனந்தம்.
என் உடல் முழுவதும் பரவசம்.
தாமரை முகம் உடையவளே!
மழை மேகம் அதை கேசம் என சுமந்தவளே!
பிறை சந்திரன் நெற்றி உடையாளே!
வில் என புருவம் கொண்டாளே!
அம்பு பார்வையால் என் இதயம் நுழைந்தவளே!
கயல் விழியால் காதல் தினம் சொல்பவளே!
பிரம்மன் அவன் கஞ்சனாக உன் இடை படைத்தவன்,
பெரும் வள்ளலாக உன் கழுத்து கிழே வாரி வழங்கி விட்டான்.
வண்ண மயிலே!
மணக்கும் மல்லிகையே!
வண்டு என உன்னை சுற்றி வர செய்து விட்டாய்.
உங்கள் வர்ணனையில் சொக்கிப்போன எனக்கு உங்கள் தோள்களே இனி தஞ்சம்.
உங்களை சரண் அடைந்தேன்.
முழுக்க தந்து விட்டேன் என்னை.
வீரனே துரிது வாளெடு என்னோடு காம போர் செய்.
வா......
- பாலு.

எழுதியவர் : பாலு (5-Jan-20, 11:35 pm)
பார்வை : 182

மேலே