அழகு தேவதை
அகன்ற விழிகளால்
உலகை நோக்கும்
மார்கழி ஞாயிறே
சற்றுப் பொறு
இந்த அமவாசை அந்திக்
குளிரைப் போக்க
நீ கதகதப்பை நாடி
கண்ணயர விரைவில்
சென்று விட்டால்
என் நிலை என்னாவது
என் தேவதை
அருகில் இருக்கிறாள்
அவள் அழகை
இதயம் பூக்க
நான் ரசித்துக்
கொண்டிருக்கிறேன்
அஷ்றப் அலி