நிலவும் நிலாவும்
பௌர்ணமி இரவு
பூரண வெண்ணிலா
நீல வானமெனும் கடலில்
ஒய்யாரமாய் பவனி வந்தாள்
பூமியில் பெரிதாய் விரிந்திருந்த
தடாகத்தைக் கண்டாள் நிலவு
அந்த இரவில் அசைவேதுமில்லாது
துல்லியமாய் இருந்தது தடாகத்து நீர்
தான் அதில் தெரிவதைப் பார்த்து
நிலவும் தன் அழகைப் பார்த்து
பெருமிதம் கொள்ள .......
அந்த நீரில் இப்போது மற்றுமோர்
நிலவைக் கண்டது வான் நிலவு
அவள் அழகில் மயங்கி வெட்கி
அங்கிருந்து மெல்ல நழுவியது .....
அந்த மற்றோர் நிலா ....... அவளே தான்
என் காதலி மண்ணில் உலாவும் நிலா
தடாகத்தில் அவளும் தன் அழகை பார்த்து
நின்றாள் ..... என் முன்னே