தைப்பொங்கல் வாழ்த்துகள்

=============================
மார்கழியாள் பூம்பனியால் மாலைகட்டிச் சென்றதனால்
*மங்கை தை சூடிடவே மலர்ப்பாதம் வைக்கின்றாள்
கூர்விழியாம் கதிரென்னும் கொழுந்தனாரின் பார்வையிலே
-குளுகுளுன்னு நாணமுற குறுநகையும் பூக்கின்றாள்
மார்பினிலே பசுமைதனை மாராப்பாய் போட்டபடி
-மாங்கனியும் தேன்சுவையும் மனசாரத் தருகின்றாள்
ஏர்பிடித்த உழவனுக்கு இன்பமென்னும் செல்வத்தை
-இதயத்தின் வாசலிலே எடுத்திங்கே வருகின்றாள்
**
வருமவளை பொங்கலிட்டு வரவேற்கும்
எழுத்து உறவுகளுக்கு இனிய வாழ்த்துகள்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (15-Jan-20, 2:16 am)
பார்வை : 166

மேலே