தைப்பாவை

பாவையின் மாதம் மார்கழி மட்டும் அல்ல தையும் தான்
கண்கண்ட தெய்வம் சூரியன் மட்டும் அல்ல விவசாயியும் தான்
உயிர் வாழ தேவை வளி மட்டும் அல்ல வான் மழையும் தான்
பொங்கலுக்கு தேவை காரமான மிளகு மட்டும் அல்ல இனிப்பான கரும்பும் தான்

அருணன் தேரோட்ட
ஆதவன் வந்தான் மகரத்தில்
உதித்தது உத்தராயணம்
பிறந்தாள் தைப்பாவை

கூந்தலில் மலர் சூடி
நெற்றியில் திலகம் வைத்து
கண்களில் மையிட்டு
காதுகளில் லோலாக்கு ஆட
கன்னங்களோ பளபளக்க
கோவை இதழில் தேன் ஊற
முத்து பற்களோ புன்னகை செய்ய
சங்கு கழுத்தோ இளமையை காட்ட
கொங்கை கனிகளோ ததும்பியிருக்க
இடையோ இல்லாமல் இருக்க
தொடையோ மடல் வாழையாக
இனியவளின் பாதமோ இலவம்பஞ்சாக
வண்ணமிகு சேலை கட்டி
வந்து நின்றாள் வஞ்சி

வஞ்சனை இல்லாமல்
வாரி வழங்க வேண்டும்
நன்மையும் செல்வமும்

எல்லோரும் இன்புற்றிக்க
எங்களுக்கு இந்த வரத்தை தர வேண்டும் தையலே

எழுதியவர் : பார்த்தசாரதி வெங்கட்ராம் (15-Jan-20, 12:53 am)
சேர்த்தது : Venkatram
பார்வை : 326

மேலே