முகம் காட்டாத மெய்க்காவல் படை - சோழர்களின் மெய்க்காவல் ஒற்றர்கள்

முகம் காட்டாத மெய்க்காவல் படை - சோழர்களின் மெய்க்காவல் ஒற்றர்கள்.

எங்களுடைய பணியில் அறிமுகமாக ஒரு முன்னாள் விமானப் படை மேஜர் எழுதிய "முகம் காட்டாத படை" என்னும் யூட்யூப் காணொளிக்கான எழுதப் பட்ட கருத்துரை.
*****************************************************************************************************************
நாங்கள் மிகவும் எதிர்பாத்திருந்த மிகவும் அருமையான தலைப்பைத் தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள்!
மனமார்ந்த பாராட்டுக்கள்!!

நீங்கள் குறிப்பிடும் "முகம் காட்டாத பின்னணி (ஆனால் முன்னணியில் எப்போதும் செயலாற்றும்)ப் படை" பெறும் மிகக்குறைந்த அளவிலான வெளிப்பாடு கூடத் துளியும் இல்லாத, இருக்க முடியாத,
வேறு படைகள் நம் நாட்டில் நிறைய இருக்கின்றன.

நீங்கள் வேறொரு காணொளியில் குறிப்பிட்ட "பயங்கரமான அறிவாற்றல் போர்" செய்யும் போராளிகள்.
நாட்டு நலத்தின் மீதான கவனம் மட்டுமே அல்லும் பகலும் ஊட்டப்பட்டு வளரும் படை இது!
சிறு குழந்தை முதல் தேர்ந்தெடுக்கப் பட்டு பல்லாண்டுகள் மிக மிகக் கடுமையான பயிற்சிகள் தரப்பட்டு இயங்கும் இவை,

முழுக்க முழுக்கத் தன்னார்கத் தொண்டர் படை. நாடுமுழுவதற்குமான ஒரே தலைவர் இவற்றை ஒருங்கிணைத்து வழி நடத்துகிறார். நாடு முழுவதும் பரவிக் கிடக்கும் இவர்கள், ஒன்று திரளத் தேவை ஏற்பட்ட ஒரு மணி நேரத்தில் எந்த இடத்திலும் திரளக் கூடியவர்கள்.

அறிவுத்திறன், மனோசக்தி, பிறவி மேதைமை பொருந்திய இவர்கள் நமது முன்னோர்களால் மன்னராட்சிக்காலத்தில் மன்னருக்கு "மெய்க்காவல் ஒற்றர்" என அமைக்கப் பட்டவர்கள்.
இவர்களைத் திரட்டி ஒருங்கிணைப்பவர் அன்று, "ராஜாங்க வித்தகர்" என அழைக்கப் பட்டார்.
நரசிம்ம பல்லவனும் ராஜராக சோழனும் மதுராந்தக பாண்டியனும் சேரல் இரும்பொறையும் கரிகால் வளவனும் போதி தர்மனும் அப்படிப்பட்டவர்கள். உண்மையான "சகலகலா வல்லவர்கள்".
எந்தத் தகவலும் இவர்களது "மெய்க்காவல் ஒற்றர்" பற்றிக் கிடைக்காதாயினும் யூகித்து அறிந்த மேற்கு நாட்டவர்கள் அமைத்த நகல்கள்தான் எம் ஐ 5, எம் ஐ 6, மொஜாட், கே ஜி பி, சி ஐ ஏ, நமது எஸ் எஃப் எஃப் முதலியவை.

இன்று வரை இந்தப் படையானது தலைமுறை தலைமுறையாக இடைவிடாமல் தொடர்கிறது.
இவர்களுக்கு எந்த ஆபத்துக்களையும் சதிகளையும் அவற்றின் கருத்தோற்றத்தின் போதே "உணரும்" ஆற்றல் உண்டு. அவற்றை "முளையில் கிள்ளி அகற்றும் மெய்க்காவல்" இவர்கள் முறை.

பகைவரை நம் நாட்டு எல்லைக்குள் வரவிட்டு அழிப்பதும் பெருமழிவு தரும் வேலை என்பதை உணர்ந்தவர்கள் இவர்கள். அதனால் பகைவரின் மூலாதாரத்தைக் கண்டு அதை அடியோடு அழிப்பது இவர்கள் தனித் திறமை. இதனால் பெரும் போர்கள் மூள்வது தடுக்கப் பட்டும், மூண்ட போர்கள் நமக்குச் சாதகமாக முடிக்கப் பட்டும் நடந்தேறி இருக்கின்றன. எடுத்துக் காட்டாக, பாலக்கோட் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்!

1970 களுக்குப் பிறகு இவர்களூடைய பணி மிக மிக அதிகமாகி இருக்கிறது. ட்ரான்ஸிஸ்டரும் மெமொரி சிப்பும் மைக்ரோ ப்ராஸஸரும் உருவாக்கிய டிஜிட்டல் டெக்னாலஜி செய்த புண்ணியம்!!

இப்படி நாங்கள் தெரிந்து கொண்டவற்றை வெளிப்பட எழுதுவதற்கு எங்களுக்கு விருப்பம் இல்லை ஆயினும் நீங்கள், படையில் இருந்து பணிசெய்திருப்பதால் பிற எல்லாவற்றையும் புரிந்து கொள்வீர்கள் எனத் தோன்றியதால் எழுதுகிறோம்.
முக்கியமாக இளைஞர்களைத் தூண்டவும் ஊக்குவிக்கவும் உங்களைப் பெரிதும் நம்பி இருக்கிறோம்.
தொடர்ந்து எழுதுங்கள், பேசுங்கள்.
மிக்க நன்றி! வணக்கம்.
பின்னர் தொடர்பில் வருவோம் என நம்புகிறோம்!

*******************************************************************

எழுதியவர் : செல்வப் ப்ரியா - சந்திரமௌலீஸ்வரன் (7-Jun-24, 5:04 pm)
பார்வை : 52

மேலே