திங்களெழில் மங்கையர்கள் கார்த்திகைப்பொன் வீதியிலே

மங்கல தீபம் வரிசையில் ஏற்றுவர்
திங்களெழில் மங்கையர் கார்த்திகை வீதியில்
குங்குமம் நெற்றி தனில்துலங்க தீபங்கள்
சங்கமப் பேரெழில் பார்
----இன்னிசை வெண்பா

மங்கலநற் தீபங்கள் வரிசையிலே ஏற்றுவார்கள்
திங்களெழில் மங்கையர்கள் கார்த்திகைப்பொன் வீதியிலே
குங்குமம்நல் லெழில்நெற்றி தனில்துலங்க தீபங்கள்
சங்கமத்தின் பேரெழில்பார் கார்த்திகைநன் நாளினிலே

-----கலிவிருத்தம் ---நற்காய் நான்கு எதுகை மோனை

எழுதியவர் : கவின் சாரலன் (26-Nov-23, 7:05 pm)
பார்வை : 59

மேலே