நன்றி அறிவித்தல்
நன்றி அறிவித்தல்
அமெரிக்க மக்களுக்கு ஒரு சிறந்த தினம்
அறுவிடை நன்றாக இருந்ததை போற்றும் தினம்
ஆவலோடு யாவரும் நன்றி கூறும் தினம்
இல்லம்தோறும் இன்பமாக ஒன்று கூடும் தினம்
ஈன்றவளை கண்டு ஆசையோடு கழிக்கும் தினம்
உயரிய பொருள்களில் உணவு தயாரிக்கும் தினம்
ஊரெல்லாம் வான் கோழி சமைத்து சாப்பிடும் தினம்
எல்லோரும் சிரித்து உல்லாசமாய் இருக்கும் தினம்
ஏழை எளியோருக்கு உணவளித்து மகிழும் தினம்
ஐஸ் பெட்டியில் வைத்த மது வெளியே வரும் தினம்
ஒன்றாக சிறுவரும் பெரியவரும் கலந்து களிக்கும் தினம்
ஓயாத விருந்தோம்பலை காணும் ஒரு உயர்ந்த தினம்
நாட்டின் செழுமையை கொண்டாடி நன்றி அறிவிக்கும் தினம்