நிவாத கவசர் காலகேயர் வதைச் சருக்கம், வில்லி பாரதம் - மரபுக் கவிதை எழுத ஒரு சிறந்த பயிற்சி

கலிவிருத்தம்

திரை கொழித்திடும் சிந்துவின் சூழலில்,
குரகதத் தடந் தேர் போய்க் குறுகலும்,
மரகதக் கொண்டல், மாதலிக்கு அன்பினால்,
விரகுறச் சில மாற்றம் விளம்பினான்: 30 - நிவாத கவசர் காலகேயர் வதைச் சருக்கம், வில்லி பாரதம்

இப்பாடல் ஒருவகை கலிவிருத்தம். இதன் இலக்கணத்தைச் சீர் பிரித்துச் சொல்ல வேண்டும். இது மரபுக் கவிதை எழுதும் அனைவருக்கும் ஒரு சிறந்த பயிற்சியாகும்.

எழுதியவர் : (26-Nov-23, 7:39 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 33

மேலே