தொழிலிற்குப் பொருத்தமான இருப்பிடம்

""" தொழிலிற்குப் பொருத்தமான இருப்பிடம்! """
சித்திரைச் சந்திரன் - செல்வப் ப்ரியா.

ஆளுங்கட்சி அமைச்சர் - ஆட்டையாம்பட்டி.
வாஷின் மெஷின் உற்பத்தியாளர் - வாஷிங்டன்.
வாஷிங் பௌடர் உற்பத்தியாளர் - வாஷிங்டன்.
நேஷனல் ரிங் சர்க்கஸ் நிறுவனர் - சிங்கப்பூர்.
வங்கிக் காசாளர் - காஷ்மீர்.
பாம்பாட்டி- - நாக்பூர்.
ஆள்துளைக் கிணறு அமைப்பவர் - போர்பந்தர்.
ராணுவ அதிகாரி - போர்பந்தர்,
வெங்காய வியாபாரி - பெல்லாரி.
மேம்பாலக் கட்டுமான நிறுவனர் - பாலமேடு.
பாக்கு உற்பத்தியாளர் - அரிக்கமேடு;
நெல்லிக்காய் வியாபாரி - நெல்லிமேடு.
சாராயக் கடைக்காரர் - பீர்மேடு.
சுண்ணாம்புக் காளவார் உரிமையாளர் - சூளைமேடு.
கல்குவாரி உரிமையாளர் - கல்பாத்தி.
மலையாள மாந்திரீகர் - பகவதிபாளையம்.
நாட்டுமாட்டுப் பண்ணையாளர் - காங்கேயம்.
டோல்கேட் உரிமையாளர் - சுங்கக்காரன்மடக்கு.
நில சர்வேயர் - முக்கோணம்.
வெல்ல வியாபாரி - பெல்லம்பட்டி.
கருப்பட்டி உற்பத்தியாளர் - கருப்பட்டிபாளையம்.
சிண்ட்டக்ஸ் தொட்டி விற்பனையாளர் - தொட்டியந்துறை.
வற்றல் தயாரிப்பாளர் - வத்தலக்குண்டு.
புளிக்கடைக்காரர் - புளியங்குடி.
தானியமண்டி உரிமையாளர் - து}த்துக்குடி.
காய்கனிக் கடைக்காரர் - பழமுதிர்ச்சோலை.
பல் மருத்துவர் - பல்லடம்.
நாட்டு வைத்தியர் - வைத்தியநாதபுரம்.
பொற்கொல்லர் - பொன்பரப்பி.
நகைக்கடைக்காரர் - தங்கசாலை.
வெள்லிநகை வியாபாரி - வெள்ளியங்கிரி.
மல்யுத்த வீரர் - மாமல்லபுரம்.
சலவைத் தொழிலாளர் - வண்ணாரப்பேட்டை.
நன்கொடை திரட்டுபவர் - தருமபுரி.
செங்கல் தயாரிபாளர் - செங்கல்பட்டு.
சிற்பி - கல்பாக்கம்.

சாராய ஆலை உரிமையாளர் - மதுரை.
நாடி ஜோதிடர் - சோளிங்கர்.
பெண்கள் உடைத் தையல்காரர் - சோளிங்கர்.
மாம்பழ விவசாயி - மாஞ்சோலை.
மாம்பழக் கடைக்காரர் - மாங்காடு.
பலசரக்குக்கடைக்காரர் - விக்கிரவாண்டி.
கோசாலை உரிமையாளர் - பசுபதிபாளையம்.
படகுக்காரர் - ஓடப்பாளையம்.
ஓலைத் தடுக்குத் தயாரிப்பாளர் - ஓலப்பாளையம்.
ஆட்டு வியாபாரி - ஆடுதுறை.
பரதக் கலைஞர் - ஆடுதுறை.
ஆட்டுப் பட்டி உரிமையாளர் - இடையபட்டி.
வாடகை ஆட்டுப் பட்டி உரிமையாளர் - ;இடையன் கிணறு.
நெய்க்கடைக்காரர் - நெய்க்காரபட்டி.
வக்கீல் - மயிலாடு துறை - (மைலார்டு துறை)
குழந்தைகள் மருத்துவமனை நிறுவனர் - குழந்தைபாளையம்.
குழந்தைகள் காப்பக உரிமையாளர் - இளம்பிள்ளை.
பாம்பு பிடிப்பவர் - நாகப்பட்டினம்.
பதக்கங்கள் தயாரிப்பாளர் - விருதுநகர்.
மணிமாலை தயாரிப்பாளர் - கோத்தகிரி.
திருமணத் தரகர் - திருமணஞ்சேரி.
கண்மைக் கடைக்காரர் - மைவாடி.
சிறுதானிய மண்டி உரிமையாளர் - கொள்ளிடம்.
முடி இறக்குபவர் - முடிகொண்டான்.
நீதிமன்றக் குமாஸ்தா - சத்திய மங்கலம்.
உணவகம்-உறைவிடம் உரிமையாளர் - அன்னசத்திரம்.
கோவில் பூசாரி - பூசாரிபட்டி..

- - - - சித்திரைச் சந்திரன் - செல்வப் ப்ரியா.
22 டிசம்பர் 2023 - வெள்ளிக்கிழமை

எழுதியவர் : சித்திரைச் சந்திரன் - செல்வப் ப்ரியா (22-Dec-23, 2:12 pm)
பார்வை : 54

மேலே