தலைவர்களும் கூத்தாடிகளும்
""" தலைவர்களும் கூத்தாடிகளும்!! """
- - - - சித்திரைச் சந்திரன் - செல்வப் ப்ரியா.
நமது வரலாற்றில் பற்பல மாற்றங்களைச் சந்தித்த நாம், ஒரு காலகட்டத்தில் நமது வாழ்வில் தன்னலமற்ற நாட்டுப் பற்றும் வீரமும் உண்மையான பொதுநல மனமும் அமைந்த தலைவர்களைப் படிப்படியாகப் புறந்தள்ளி வைத்து விட்டோம். நமது வாழ்வில் இருந்து ஒதுக்கி வைத்து விட்டோம்.
அவர்களுக்குப் பதிலாக அரிதாரம் பூசிக்கொண்டு கூத்து மேடையில் அரசனாக வீரனாக உழவனாக தலைவனாக அரிஞனாக வேடமிட்டு ஆடுபவர்களை அரங்கேற்றி வைத்தோம். அவர்களை அரசனாக வரித்துக் கொண்டோம்
மேதைத் தலைவர்கள் போற்றிப் பாதுகாக்கப் படவேண்டியவர்கள்.
மேடைக் கூத்தாடிகள் பொழுதுபோக்கு ரசனைக்காக மட்டும் வைக்கப் படவேண்டியவர்கள்.
தலைவர்களை அரியணையேற்றி நாடாள வைக்க வேண்டும்,
கூத்தாடிகளை அர்கேற்றி ஆடவிட்டு ரசிப்பதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்;
தலைவர்களை அரியணையேற்றினால் நாடு வளம்பெறும்.
கூத்தாடிகளை அரியணையேற்றினால் நாடு நலிவடைந்து நோயாளியாகிவிடும்.
தலைவர்கள் அரசியலில் திரட்டும் செல்வம் நாட்டிற்கும் மக்களுக்கும் பயன்படும்.
கூத்தாடிகள் கூத்துமேடையில் திரட்டும் செல்வம் அவர்களுக்கும் அவர்களின் குடும்பத்திற்கும் மட்டும் சென்று விடும்.
- - - - - சித்திரைச் சந்திரன் - செல்வப் ப்ரியா.
17 டிசம்பர் 2023 - திங்கட்கிழமை.