வீட்டுக் கதவைத் தட்டுகிறது சந்தர்ப்பம்
""" வீட்டுக் கதவைத் தட்டுகிறது சந்தர்ப்பம்! """
- - - சித்திரைச் சந்திரன் - செல்வப் ப்ரியா.
ஒவ்வொருவர் வாழ்விலும் ஒவ்வொரு நாளும் சந்தர்ப்பம் வீடுதேடி வந்து வாயிற்கதவைத் தட்டுகிறது.
அதைக் கவனித்துக் கொள்பவன் பயன்பெறுகிறான்.
அதாவது அதைச் சரியான "முறையில்" "கவனித்துக்" "கொள்பவன்" பயன்பெறுகிறான்!!
கதவைத் தட்டும் சந்தர்ப்பத்தைக் காது கொடுத்துக் கேட்பது மட்டும் போதாது.
அது இரட்டு மூன்று தட்டுத் தட்டிப் பார்த்து விட்டுப் போய்விடக் கூடும்!
கதவைத் தட்டும் சத்தம் கேட்ட உடனே ஓடிச் சென்று கதவைத் திறக்க வேண்டும்.
சந்தர்ப்பத்தைச் சிரித்த முகத்துடன் வரவேற்க வேண்டும்.
அதை வீட்டிற்குள் வருமாறு அழைக்க வேண்டும்.
வீட்டினுள் அமரவைத்து மரியாதை தந்து உபசரிக்க வேண்டும்.
அதனுடன் சற்று நேரத்திற்கு சிரித்துப் பேசி மகிழ்விக்க வேண்டும்.
அதை நமது நண்பணாக இருத்திக் "கொள்ள" வேண்டும்.
அப்படி அதைச் சரியான "முறையில்" "கவனித்துக்" "கொள்பவன்" பயன்பெறுகிறான்!!
- - - - சித்திரைச் சந்திரன் - செல்வப் ப்ரியா.
17 டிசம்பர் 2023 - திங்கட்கிடமை