கணக்கு

என்ன கோபம் என்று என்னை
குழப்பிவிடும் உன்

ரோஜாப் பூ போன்ற முகத்தின்
கடினப்பார்வை

உடனடியாய் எப்படி உன்னை
சமாதானப் படுத்துவது என்று

போடும் கணக்கை ஒழுங்காய்

படிக்கும் காலத்தில் போட்டிருந்தால்

எதாவது ஒரு வங்கியில் வேலை
கிடைத்திருக்கும்

பரவாயில்லை இப்பொழுதெல்லாம்
நான்

கணக்கை சரியாக போடுகிறேன்
என்பதை

உடனே தெரிந்துகொள்கிறேன்

நீ சமாதானமடைவதிலிருந்து

எழுதியவர் : நா.சேகர் (8-Jan-20, 9:44 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : kanakku
பார்வை : 203

மேலே