தமிழன்

கோடிகள நீ
கொக்கரிக்க விட்டாலும்
எங்களோட தன்மானம்
தரைக்கி இறங்கிடாதுயா...

நிலம் வச்சிருக்கிறோம்
நிம்மதியா விவசாயம் செஞ்சிடுவோம்
நிலைச்சி இருப்போம்
ஒன் நிழலயும் தொடமாட்டோம்யா...

தாய்ப்பாலால தழைச்சி
இருக்கிறோம்...
தமிழ் பண்பாட
விதைச்சி இருக்கிறோம்..
தாய்நாட்ட தலையா
தாங்கிடுவோம்
நீ பகச்சிடாம பறந்துடுயா...

மருத்துவம் சொல்லிக்
கொடுத்திருக்கிறோம்
மரபணுவுல வீரத்த
விளைச்சிருக்கிறோம்
மானரியக் கலையையும்
மனசோட புதச்சிவச்சிருக்கிறோம்
நீ நினப்புக் காட்டாம நீங்கிடுயா...

ஒரே இரைவன
ஒன்னா தொழுது
ஒற்றுமையா ஓடி
ஒழுக்கத்த நாடி
ஒரே கூடாகிடுவோம்
நீ கால் நீட்ட கனவுலயும்
நினைச்சிடாதயா...

சாதி என்னு
சாவ தூண்டுறவன
சல்லடையா அடிச்சி
சாக்கடையா ஒதுக்கிடுவோம்
நீ நிலைகுழைக்க
நினைச்சும் பார்த்துடாதயா...

சுதந்திரமா சுற்றி
எங்க நாடப் பற்றி
எட்டாத பெரும கொட்டி
புகழ் பூசிடுவோம்
நீ நிமிர
நாங்க ஒருநாளும்
வலைஞ்சிட மாட்டோம்யா..

(இஷான்)

எழுதியவர் : இஷான் (3-Jul-20, 9:01 pm)
சேர்த்தது : இஷான்
பார்வை : 71

மேலே