கவிஞனின் கைரேகை
ஓங்கும் என்ணங்களுக்கு
பாங்கு ஒளிக்கவில்லை என்றால்
தூங்கும் கருக்களுக்கு
தும்பிக்கை முளைக்காது...
ஓடும் சொற்களுக்கு
சிந்தனைகள் பாசியாகாவிட்டால்
கவியின் துடிப்பும்
கூறான உயிர்ப்பாகாது...
தட்டும் நவீனங்களுக்கு
குத்த கொம்பு இல்லை என்றால்
சிட்டு வாசகனுக்கும்
பட்டு படறாது...
வரையும் மொழிநடையின்
கட்டான மொட்டுக்குள்
புதுமை சொட்டாமல் விட்டால்
காலமும் கணக்கெடுக்காது...
வற்றாமல் கவி பாட
உணர்வுகளை வட்டியாக்கிவிடு
குன்றாத கவிஞன்
உனக்குள் என்றும் குந்தி இருப்பான்...(இஷான்)