கற்பனை காடு

"கற்பனை காட்டிலே என் உள்ளம் தேடல் மரமாக கிடக்க
வேருக்கு நீர் ஊற்ற தயாராகிறது சிந்தனைகள்...."
"கற்பனை காட்டிலே அணிகளும்,மொழிவளங்களும்
புதைந்து கிடக்க
பிடுங்கி எடுத்து கொண்டு வந்து இதோ! நடுகிறது எண்ணங்கள்"
"கற்பனை காட்டிலே பழங்களாக பழுத்து குலுங்கும் ஓசைநயத்தையும்,இலக்கண வளத்தையும் பறித்து கொண்டு வருகிறது உணர்வுகள்"
"கற்பனை காட்டிலே சிரு கிளைகளாக வளர்ந்து கிடக்கும் பொய்களையும்,மெய்களையும் வெட்டி கொண்டு வந்து சேர்கிறது அனுபவங்கள்"
"கற்பனை காட்டிலே ஆழமரமாக வளர்ந்து
கிடக்கும் உலக நடப்பை அண்ணார்ந்து பார்த்து விட்டு நடக்கிறது அனுதாபங்கள்.."

எழுதியவர் : இஷான் (6-May-19, 1:17 pm)
Tanglish : karpanai kaadu
பார்வை : 240

மேலே