கோளாறு மிக நிறைந்தது
வாழையில் பூ பூத்தால் வாசம் அதிகம் வீசுவதில்லை
தாழம்பூ மலர்ந்தால் தண்டோரப் போட தேவையில்லை
தேனிக்கள் ஒரு போதும் கசப்பு தேன் சேர்ப்பதில்லை
தேவைக்கு மேல் இருந்தாலும் ஆசை என்றும் குறைவதில்லை
அன்பாய் நீ வாழ்ந்தாலும் ஆயுள் என்றும் கூடுவதில்லை
அளவுக்கு மேல் ஒரு போதும் அரிசி அது பெருப்பதில்லை
கொலை செய்ய வாள் எடுத்தால் சுழலும் பூமி நிற்பதில்லை
கொடுமை செய்ய எத்தனித்தால் உண்மை சொந்தம் நிலைப்பதில்லை
கோளாறு மிக நிறைந்தது கோளமான இந்த பூமி
தாராள மனம் கொண்டு தளராமல் வாழ்ந்து காமி.
- - - நன்னாடன்.