கடும் இருள் சூழ்ந்து விட்டால்

கதிரவன் அவன் மையமாய்
கோள்கள் எல்லாம் கோளமாய்
சுற்றி வரும் கதிரதனை
சிதறிச் செல்லும் சூழல் இல்லை

கதிரதனை நோக்கி நின்றால்
கச்சிதமாய் வெப்பம் வரும்
கடும் இருள் சூழ்ந்து விட்டால்
கட்டுக்குள் இன்றி குளிர் சூழும்

புவியின் சூழ்நிலையோ
புதிய பரிணாமத்தில் - இதில்
வளிமண்டல கட்டு உண்டு - இது
வாட்டம் வராமல் காப்பதுண்டு

ஒவ்வொரு கோளிலுமோ
ஓராயிரம் வாயுக்கள் உண்டு
ஒவ்வொன்றும் பூமியையே
ஓங்கி உயர்த்தும் தன்மையுண்டு

உயிர் கோளம் பூமி தனை
உயிரைப் போல் காத்து நிற்போம்
உருவாகும் அழிவிலிருந்து
ஒவ்வொன்றையும் பாதுகாப்போம்.
- - - நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (6-May-19, 6:43 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 456

மேலே