பாடம்

தட்டுத் தடுமாறி
கீழே விழுந்து
விரக்தியுடன்
அண்ணார்ந்து பார்த்த
மாற்றுத்திறனாளி
நண்பன் ஒருவன்
ஒற்றை சிறகை
ஓயாமல் அடித்து
மெல்ல மெல்ல
பறந்த பறவையைப் பார்த்து
எழுந்து நின்று
நம்பிக்கையுடன் நடந்தான் ...

எழுதியவர் : வருண் மகிழன் (7-May-19, 12:43 pm)
சேர்த்தது : வருண் மகிழன்
Tanglish : paadam
பார்வை : 681

மேலே