தேர்தல் முடிவு

*தேர்தல் முடிவு*
👆👆👆👆👆👆👆👆

பெண் பார்க்கும் பெருநிகழ்வாய் வேட்பாளர் தேர்வு

மொய் கொடுத்து கை பதிக்கும்
தேர்தல் திருமணம்

கரு சுமக்கும் வயிற்றறையாய்
தேர்தல் பெட்டிகள்

கரு சுமக்கும் பெண்மணியின்
கணவனாக வேட்பாளர்

சிசேரியன் செய்யப்போகும் வாக்கு எண்ணும் அலுவலர்

கருக் கலைந்த பெண்ணாக
கவலைப்படும் வேலூர்


முதல் குழந்தை செத்துவிட
மனமொடிந்த பெண்மணி

மறுபடியும் கருவுறும்
ஒட்டபிடாரம் உள்ளிட்டவள்

பிறக்கப்போவது பெண்ணா ?ஆணா ?
பெருங்கவலை தொற்றிக்கொள்ள

உறவுகளும் நட்புக்களும்
உன்னிப்பாய் காத்திருப்பு

க.செல்வராசு
🍼🍼🍼🍼🍼🍼🍼🍼🍼

எழுதியவர் : க.செல்வராசு (7-May-19, 2:47 pm)
சேர்த்தது : கசெல்வராசு
Tanglish : therthal mudivu
பார்வை : 159

மேலே