கள்ளி

கன்னக்குழி களத்துல
கப்பல் கட்டி கடத்தையில
கச்சையா இழுக்குதடி
காட்டுக்குழிக் கள்ளி...

சிரிப்பு மடக்கையில
சிக்கல் தெரிகையில
சிலந்தி வலையில
சிறப்பா சிதறயில
சிலம்பாட்டம் ஆகுதடி
சின்ன நெல்லி...

அத்தி அழகுல
நிரப்பு குணத்துல
திறப்பா, விரிகையில
உறக்கம் உறுமுதடி
உப்பா கிள்ளி....

நீ நிமிர்த்தி பேசயில
நிதானம் நிலைக்கயில்ல
மனசும் படர்கையில கிடக்குதடி
பாவம் அந்தப் பல்லி..

மப்புக் குறும்புல
மடக்கென்னு சொடக்கு போடயில
மத்தது எல்லாம்
மல்லாக்காகுதடி பசப்பி...

கொள்ளி வைக்காம
கொஞ்சமா அள்ளி
உயிரோட புள்ளிய
நீ உருட்டையில
உத்தமம் உலறுதடி இதச் சொல்லி...

வெள்ளியென்னு கவி சொல்லி
வெள்ளாமையா காதல் துள்ளி
வெத்துல வேப்பமரத்தோட பேசுதடி
வெளப்பம் இல்லாத முள்ளி...

நீ இல்லாம
பிறவி தள்ளி
பிழைப்பும் திப்பி
தினமும் உன்ன
அன்பால அப்பி
அகிலம் அணையுதடி சொக்கி....
(இஷான்)

எழுதியவர் : இஷான் (28-Oct-20, 7:05 pm)
சேர்த்தது : இஷான்
Tanglish : kalli
பார்வை : 111

மேலே