arsm1952- கருத்துகள்
arsm1952 கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [48]
- கவின் சாரலன் [28]
- ஜீவன் [15]
- தாமோதரன்ஸ்ரீ [11]
- hanisfathima [10]
தனி வீடு, அடுக்கு மாடி குடியிருப்பு, இரண்டுக்குமான சாதக, பாதகங்கள், மற்றும் இரண்டுக்குமான ஒரு ஒப்பீடு மட்டுமே.
அநீதி கண்ட இடத்து எதிர்த்திடல் ,
இடம் பார்த்து செய்திடல் வேண்டும்,
துணிவு வேண்டும், துணை வேண்டும்.
வம்பு எதற்கு, வாதம் எதற்கு என்றிருத்தல்,
சால சிறப்பு, சந்தர்ப்பம் அறிந்து,
வளைந்து கொடுத்து நீ வாழ்.
கசிவது தடுத்தல் ரகசியம்.
சொல்லியுள்ள நாலும் அவசியம் .
எந்நாளும் காத்திடல் அதிசயம்.
ராணுவம் நாட்டின் இதயம்.
இதயம் பிரதானம்,
ராணுவத்தில் ரகசியம் காத்தல் மூலதனம்.
ஐநா சபை - பத்தோடு பதினொன்று,
ரகசியம் இங்கு பாதுகாக்க அவசியமில்லா ஒன்று.
அரசியல் - குப்பை. குப்பையில் எங்கே பாதுகாப்பு.
அப்போல்லோ மருத்துவ மனை - அப்போல்லோ மட்டுமல்ல,
அப்பா வீட்டு மருத்துவ மனையும் பாதுகாப்பே.
சொல்லுறுதி, தர்ம நெறி காத்தல் உறுத்துமே.
அழித்து - அழித்தது என்று மாறி அவர் வேண்டும்.( தட்டச்சுப் பிழை)
பறவையின் குரல்.......
ஏக்கங்கள் எத்தனையோ உண்டு,
எடுத்துச் சொன்னதில் உண்மையும் உண்டு,
அலை பேசி கோபுரம் தந்த கதிர்வீச்சு, கொஞ்சம்,
கூடுகட்டி வாழ ஓட்டு வாரத்தை தொலைத்துவிட்ட வஞ்சம்,
பறந்து சேகரித்த தானியங்களில் உயிர்ப்பில்லா அச்சம்,
நீர் நிலைகளை அழித்து உச்சம்.
மனிதர்களே ! உங்களைக் காக்க யார் கவிதை வடிப்பர்?
நன்றி,நன்றி.
காமத்தைத் தூண்டுவது - ஆடை.
காதலைத் தூண்டுவது - அழகு.
நன்றி.
உங்களுடைய உள்ளார்தமான வாழ்த்துகளுக்கு நன்றி.
எனது புத்தாண்டு வாழ்த்துக்கள் .
திகில் கதை படித்ததுண்டு ,
திகில் கவிதை கண்டுகொண்டோம் !
சரசெமென கவிதை தொடங்க ,
சர சரவென திகில் கூட,
ஏதும் நடக்காதிருக்க மனம் ஏங்க,
தொடர்ந்து படிக்கவே ஏங்குது மனசு .
அருமை ,அருமை .
கற்பனையின் உச்சம்.
கவிதையில் கொஞ்சம் .
SENSEX --- புள்ளியல்
CHESS ------ சதுரங்கம்
TENNIS ------- மட்டை பந்தாட்டம்
பம்பரம் ----- டாப்
பட்டத்திற்கு --- KITE
அருமையான கருத்து
எடுத்துச் சொன்ன விதம் சிறப்பு
நினைத்துப் பார்க்க வேண்டும்
உண்மை இதுவென்று.
காதலனைக் காண
காத்திருக்குது கண்கள்
கண்கள் வழியே போகுது மனசு
மனசு நிறைந்தவன் மணாளனாக வேண்டும்
வேண்டியதைப் பெற்றிட
பெற்றிடவேண்டும் பெற்றோரின் சம்மதம்
சம்மதம் தந்திடுவீர் , மனங்கள் இணையட்டும்.
உண்மை நிலை ,
உணர்த்து சொல்லிய பாங்கு,
அருமை, அருமை .
இருக்கும் விளை நிலத்தில் ,
இட்டதும் விஷமல்லவா !
இருந்துபார்க்க ஆள் இல்லா
நிலையல்லவா !
கண்டுமுதல் காணாமல் ,
போட்ட பணம் வாராமல்,
முதல் போடாத இடைத்தரகர்,
ஏமாற்றும் தொழில் அல்லவா .
சாயம் வெளுக்கட்டும்
விவசாயம் தழைக்கட்டும்
உழைப்புக்கு விலை கிடைக்கட்டும்.
கணக்கில் வராத கனவுகள்
எண்ணத்தில் நிற்கும் வரிகள்
சொல்லிப் புரிவதில்லை உணர்வுகள்
சொல்லாமல் தெரிவதே கனவுகள்
அம்மா தந்தது வாழ்வு
நாம் அம்மாவுக்குத் தருவது வாழ்க்கை
அம்மாவிற்கு
வாழ்ந்து காட்டி வளம் சேர்க்க வேண்டும்
நலம் கூட்டி நன்மை செய்யவேண்டும்
மனதில் நிறுத்தி சுகம் கொடுக்க வேண்டும்
காதலில் சோகம் வேண்டாம் .
பாகம் கொடுத்தால் ,
பக்கம் இணைந்திடுவாள் .
துக்கம் நீங்கிவிடும்.
காதலில் களவும் அளவும் மீறினால் காமம்.
காமம்,பேச்சிற்க்கும் எழுத்திற்கும் அப்பாற்பட்டது.
காமத்தை பேச்சிலும் எழுத்திலும் செயலிலும்
வெளிப்படுத்தினால் அது காமுகனின் செயலாகிவிடும்.
காமம் தப்பான செயலல்ல.
காமம் தனித்து சுவைக்க வேண்டிய ஒன்று.
பகிர்வதர்க்கல்ல.
.
உங்கள் கருத்து,உங்கள் ஆதங்கம் புரிகிறது. உங்கள் கருத்தில் உண்மையும் இருக்கிறது.
என் பழக்கம் படித்த நல்ல கவிதைகளுக்கு உடன் என் கருத்தை பதிவு செய்துவிடுவேன்.
உயர்வு அறிந்து உணர்வு புரிந்து
பாராட்டினைப் பகிர்தல்
படித்தவர் பண்பு
படைத்தவருக்குப் பரிசு.
மங்கையவள் ஆடுகிறாள் ஊஞ்சலில்
பார்த்தவர் மனமும் ஆடுது ஏங்கியே
இயற்கைக்கும் அழகு சேர்கிறாய்
அழகின் அழகாய் நீ இருக்கிறாய்
சோர்வு நீக்கும் சுகம் தருகிறாய் .
இல்லறம் கண்டவள் வேலியென்றால்
இல்லறம் கொண்டவன் சின்னமெங்கெ..?
இங்கு ஆணும் பெண்ணும் சமமென்றால்
இதில் ஆணுக்கு சமமாய் எதுவென்போம்..?
அருமை , அருமை .கவிதை வரிகளின் உச்சம் .
தாலி - வேலியுமல்ல,சாவியுமல்ல, கூலியுமல்ல
பெண் என்ற விருச்சதின் ஆணி வேர்
பண்பாட்டின் உயிர் .
மன சாட்சியின் ஆதாரம்.