தாலியா - குமரி

தாரம் ஆக தலை கவிழ்ந்தாய் - பின்
பாரம் ஆனது நிலை குலைந்தாய்,,!
ஓரம் தள்ளிவிட மனம் முயன்றாய் - பின்
ஈரம் தளிர்விட் தினம் சுமந்தாய்...!

சோரம் போகாமல் தடுக்கிறது - பின்
சோகம் பிடிக்க தவிக்கிறது...!
அச்சம் கொண்டு தவழ்கிறது - பின்
துச்சம் எங்கும் மிரள்கிறது..!

பணிவிடை துஞ்சாது செய்கின்றாய் - பின்
பிணி விடை பெறாமல் தொடர்கின்றாய்..!
பாதம் வணங்கி வாழ்கின்றாய் - பின்
வேதம் சொல்ல ஓய்கின்றாய்..!

இல்லறம் கண்டவள் வேலியென்றால்
இல்லறம் கொண்டவன் சின்னமெங்கெ..?
இங்கு ஆணும் பெண்ணும் சமமென்றால்
இதில் ஆணுக்கு சமமாய் எதுவென்போம்..?

பெண்ணுக்கு...
அடிமையின் சின்னம் தாலியா..? - இல்லை
அழகு பெண்மைக்கு வேலியா..?
நிரந்தர கொடுமைக்கு சாவியா..? - இல்லை
நிதமும் ஊழியம் செய்ய கூலியா..?

எழுதியவர் : குமரி பையன் (17-May-15, 6:43 pm)
பார்வை : 189

மேலே