ஏதோ - கே-எஸ்-கலை
![](https://eluthu.com/images/loading.gif)
எரித்த காதல்கடிதங்கள்
ஈரச்சாம்பலில் உயிர்த்திருந்தது
புதிய காளான்கள் !
-
ஆடும்
தள்ளாடாது
பனை !
-
ஈக்கள் மொய்க்கின்றன
சிரித்துக் கொண்டிருக்கிறது
பூச்செடி !
-
நீர்க் கொடிகள்
தழுவிக் கொண்டிருக்கும்
பழைய கல்லறைகள் !
-
வெறிக்கும் பூனை
கடற்கரையின் ஓரம்
திமிங்கிலச் சடலம் !
-
கல்லும் கல்லும்
முகம் பார்க்கும்
வற்றிய நதியில் !
-
கிளைகளை விட்டு
நிலத்தை வந்தடையவில்லை
இலைகளின் நிழல் !
-
ஒரு மரம்
ஆவலாய் வந்தது குரங்கு
நிறைய இலவங்காய்கள் !