காலத்தும் வணங்கி போற்றிடுங்கள்

கடலோரம் ஓய்வெடுக்கும் ஓவியத்தின்
** இதழோரம் மலர்கிறது பரவசம் !
கரையோரம் காத்திருக்கும் காவியத்தின்
** விழியோரம் வழிகிறது காதல்ரசம் !
மிதந்துவரும் பாய்மரமும் ஓர்பல்லாக்கு
** திறந்தஉன் பார்வையையும் வில்லாக்கு !
கண்டிடுவாய் உன்உள்ளம் கவர்ந்தவனை
** வீசிடுவாய் உந்தன்காதல் கணையினை !
பொறுத்திடும் பொழுதுகள் இன்பமாகுது
** பொருந்திடும் இதயங்கள் இல்லறமாகுது !
விளைந்திடும் எண்ணங்களே கனவாகுது
** விழித்திடும் நேரங்களிலே நனவாகுது !
நேர்மறை நிகழ்வுகண்டு மகிழ்கிறோம்
** எதிர்மறை காட்சிகண்டு வருந்துகிறோம் !
நிறைவேறா ஆசையால் துவளுகிறோம்
** நிறைவேறி முடிந்தால் துள்ளுகிறோம் !
காதலித்து மணப்பதும் தவறன்று
** காதலில் தோற்பதும் நிகழ்வதுண்டு !
காதலில் இடைவெளியும் வருவதுண்டு
** காதலில் இந்நிலையும் முடிவன்று !
பாடம் எடுக்கவில்லை காதலில்நான்
** பார்த்ததை கூறுகிறேன் இங்குநான் !
அனுபவம் இல்லாத மாணவனேநான்
** அறிந்ததை இயம்பிய மனிதனேநான் !
காதலிக்கும் உள்ளங்களே கேளுங்கள்
** காதலை பெற்றவரிடம் கூறிடுங்கள் !
காலமும் வளர்த்தோரை நினைத்திடுங்கள்
** காலத்தும் வணங்கி போற்றிடுங்கள் !
இருகைஒசையே ஒலிதனை எழுப்பிடும்
** இணைந்திடும் உள்ளங்கள் குடும்பமாகும் !
உள்ளவரை நலமுடனே வாழ்ந்திடுக
** உலகத்தில் மகிழ்வோடு வாழ்ந்திடுக !
பழனி குமார்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

பிரபல கவிதை பிரிவுகள்
சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

ஹைக்கூ...
மெய்யன் நடராஜ்
24-Mar-2025
