எழுத்து அறிவித்தல்

இனிப்பும், துவர்ப்பும்,
நா தரும் சுவையே !
இன்பமும் , துன்பமும் ,
மனம் தரும் நிலையே !
அன்பும் ,பண்பும் ,
நடை முறை வாழ்வே !

கண்களில் பார்ப்பது நிலையாகும் ,
காதுகள் கேட்பது உரையாகும் ,
சுவாசம் உயிரின் வழியாகும் ,
பாசம் உறவின் உயர்வாகுமே !

கனிவு தரும் சொல்லும் ,
கை காட்டும் செயலும் ,
அண்ணமிடும் பண்பும் ,
தலைமுறை காத்திடுமே !

ஆலயம் தொழுதல் ,
ஆயிரம் நன்மையாயினும் ,
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் ,
அதனினும் மேலாகுமே !

எழுதியவர் : arsm1952 (15-Jun-16, 3:47 pm)
பார்வை : 301

மேலே