ஒற்றையடிப்பாதை

காத்து கருப்பு
அண்டுமுன்னு அப்பத்தா
தலையில் வேப்பிலையை சொருக.
அப்பத்தாவை ஒரு முறைப்பு..
முறைத்துக் கொண்டேன்...
ஏதோ பாட்டை முனுமுனுத்துக் கொண்டே
சலசலக்கும் சந்தைக்குள்ளே
காய் கனிகளை வாங்கிக்கொண்டே
பலகாரப்பொட்டலம் சில‌
கட்டிக்கொண்டேன்...
அந்தி நேரம் வந்துவிட‌
ஒற்றையடிப்பாதையிலே
ஒய்யாரமாய் நடந்து வந்தேன்
பின்னால் ஏதோ சர சரக்க‌
அய்யனாரை நினைத்துக்கொண்டே
திரும்பாமலே நடையை கட்ட‌
காத்தோ கருப்போ என்று
காய்ச்சலில் விழுந்து விட்டேன்...

எழுதியவர் : வே.புனிதா வேளாங்கண்ணி (15-Jun-16, 1:17 pm)
பார்வை : 144

மேலே