வாழ்க்கை ஆனந்தம் = பணம் + அன்பு + நிம்மதி + அமைதி

வாழ்க்கை
- சில அனுகூலமான தருணங்களினால் உயர்ந்திடும்,
- பல துரதிருஷ்டமான சமயங்களில் தளர்ந்து விடும்;
- ஒரு திடமான அணுகுமுறையால் உறுதியுடன் நோக்கும்,
- தன் பலஹீனங்களால் ஆதாரமின்றி அதிர்நது தடுமாறும்.

அந்த வாழ்க்கையில் சந்தோஷம்
- பணம் இருந்தால் மட்டுமே நிமிர்ந்து நிற்கும்,
- இல்லையேல் வெளியில் சொல்லாது முடங்கி கிடக்கும்.
- ஆனாலும் பணம் அமைதியெனும் வட்டத்துக்குள் செல்லாது,
- அந்த அமைதியை ஏந்தும் விழிகளைத்தேடி அதனுள் அன்புக்காகவே ஏங்கும்.

அன்பென்பது ஒரு வழிப்பாதை
- அது ஆள் அரவம் பார்த்துத்தான் நுகரும், நெருங்கும்.
- காதலாகி கசியும் அல்லது வாஞ்சையுடன் வருடும்.
- எனினும் பிரதிபலன் வேண்டும் வேண்டாமல் வேண்டும்,
- அது ஒரு துடிப்புடைய ஜீவன், துவண்டால் தொலைந்திடும்..

வாழ்க்கைக்கு
- பணம் பிரதானமில்லை, இருந்திருந்தால் பணக்காரன் தான் அதிர்ஷ்டசாலி.
- நிம்மதி ஒரு அடையாளம், அது இன்றி மனம் அதிரும் அலைக்கழிக்கும்.
- ஆனந்தம் அவசியம் அதைப்பெற கொஞ்சம் பணம், அன்பும் நிம்மதியும் முக்கியம்,
- இதெல்லாம் நிறைந்து விட்டால் வாழ்க்கையை சேர்ந்து ரசிக்க நேரம் வேண்டும்.

ஆனால் நம் வாழ்க்கையோ
- பணம் தேடும் ஒரு படலமாய் நீள்கிறது, பற்றாக்குறையால் படபடக்கிறது,
- அன்பை அடையாளம் காணாது, இல்லை கண்டும் கெஞ்சுகிறது அல்லது மிஞ்சுகிறது.
- அமைதியை அழகுணர்ச்சியில் தேடுகிறது, ஆனால் நிஜமாய் அது நிழலாடுகிறது.
- சந்தோசமாய் சில நேரம், நிம்மதியை தொடுகிறது -
உணர்ச்சிவசப்பட்டதும் நிம்மதியிழக்கிறது, மறுபடியும் முதலில் இருந்து.

எழுதியவர் : செல்வமணி (15-Jun-16, 10:20 am)
பார்வை : 282

மேலே