தத்துவங்கள் யானைப் பசி
ஆணிகளில் கசிகிறது
அடித்தவனின்
சாயல்...
----------------------------------------
அணைத்திட்ட பொழுதுகளை
மாற்றுகிறது
பௌதீகம்....
---------------------------------------------
சுயம் கடந்து நானானேன்
சுருக்கு போட்டது
தற்கொலை..
----------------------------------------------
பொருள் அற்ற பிதற்றலில்
தத்துவங்கள்
யானைப் பசி...
------------------------------------------------
நிறமற்ற நேரங்களை
நேர் நிறுத்த
சாய்ந்தது குடை...
--------------------------------------------------
யாருமற்ற சிதைவுகளில்
தனிந் தனி
பின்னிரவு...
----------------------------------------------------
கலைந்த பிறகு
கடலாகிறது
நிர்வாணக் கரை...
----------------------------------------------------
தீர்த்தக் கரை கனவுக்குள்
தெற்கு மூலை
அலைகிறது...
-----------------------------------------------------
நீ சேந்தும் கிணற்றில்
நீர் இல்லை
நிலவு...
--------------------------------------------------------
கவிஜி
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
