மகிழ்ந்திடும் உள்ளங்கள் மறுக்காது

​மங்கை யவளின் மனதும் ஊஞ்சலாடுதோ
மகிழ வைத்தமன் மதனாலோ - அவரும்
மண்ணில் எவரோ மாலையும் சூடுபவரோ
ஆடி முடித்ததும் அறிவித்திடுக !

​கார்மேகக் கூந்தலும் காற்றினில் பறக்குது
தார்மீக உரிமையுடன் தவிக்குது - உந்தன்
கயல்விழி பார்வையும் களிப்புடன் நோக்குது
இயற்கை அழகும் இனிக்குது !

ஊஞ்சலில் அமர்ந்து உற்சாகம் அதிகரிக்க
தீண்டிடும் தென்றலால் திகட்டிடா - இன்பம்
காண்பவர் நெஞ்சை கவர்ந்திடும் நிச்சயம்
மகிழ்ந்திடும் உள்ளங்கள் மறுக்காது !


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (16-May-15, 3:24 pm)
பார்வை : 143

மேலே