நல்வாழ்த்துகள்

குளக்கரையில்
தூண்டில் புழுவிற்கு
ஆசைப்பட்டு
என் வீட்டு
மீன் குழம்புக்கு இரையாகிய
அந்த மீன் குஞ்சுக்கு
நல்வாழ்த்துகள்.

ஒரு கற்றைப் புல்லுக்கு
சபலநீரிட்டு
கசாப்புக்காரரின் கத்தியில்
வெட்டுப்பட்டு
என் நாசியில் வாசம் வீசும்
அடுத்த வீட்டு
மட்டன் குழம்பாகிய
ஆட்டுகுட்டிக்கு
நல்வாழ்த்துகள்.

இவ்வாறே
வாழ்த்துச் சொல்ல
பழகிக்கொள்கிறேன்.
நேர்மைக்கும்
நீதிக்கும்
நியாயத்திற்கும்
ஜனநாயகத்திற்கும்
எனக்கும்
உங்களுக்கும்...

சொல்கிறேன்
நல்வாழ்த்துகள்.!

எழுதியவர் : வியன் (16-May-15, 6:08 pm)
Tanglish : nalvazhththugal
பார்வை : 81

மேலே