அவன்ள்

திக்கு முக்காட வைத்த அந்த இரவில்
அவனின் புகைப்படம் தேடி கலைக்கப்பட்டது
என் அறை....

என்னுள் இருந்த
அவனை என்னாலே வெளிக்கொணர
வேகமாய் விரைந்தன விரல்கள்.....

தூரிகைகளின் துளிகளில் நடக்கும் ஓவியக் குறியீடுகளின் உருவகங்கள்
அனைத்தும் அவனின் அன்பை அர்ப்பணிக்கவில்லை....

என் ஓவியக்கலைக்கும்,
அவனுக்கும் தொடர்பற்ற தோரணையில் அவனிடமிருந்த அன்பை ஆழமாகத் தேடி கண்டுபிடிக்க......

இன்னொரு ஜென்மத்தில், இன்ப வேளையில்
துள்ளிக் குதிக்கும்
இதயப் பூக்களின் நிறங்களில் தோய்த்து வாழ்க்கையின் உணர்வுகளாய்
அவனை வரையும் முயற்சியில்
இறங்குவேன் நான்....

எழுதியவர் : keerthi jayaraman (16-May-15, 8:18 pm)
பார்வை : 96

மேலே