மே 18

மே 18
~~~~~~~~~~~~~~~~

தமிழின உறவுகளெல்லாம்
பிணங்களாய் கிடந்த நாள்
இந்த நூற்றாண்டின் கொடூர
இனப்படுகொலை நாள்

துப்பாக்கி முனையில்
என் சகோதரிகளின்
கன்னிதிரை கிழித்த நாள்

ஆடை களைத்து
அம்மனமாக்கி
வீரத் தமிழச்சிகளின்
முலை அறுத்த நாள்

பிறப்புறுப்பு வெட்டி
உடல் பிளந்து
என் சகோதரர்கள்
மண்ணில் புதையுண்ட நாள்

எம்மொழியும் அறியா
பச்சிளங்குழந்தைகள்
மொழிப்போரில் மாண்ட நாள்

அமைதிப் படையெனும்
இந்திய காமுகர்கள்
வன்புணர்ந்த நாள்

குண்டு இடிகளும்
தோட்டா மழைகளும்
சடல தேக்கங்களை
அதிகரித்த நாள்

சிங்களப் பேரினவாதத்தால்
மன்னிக்க முடியா
போர் குற்றங்கள்
அரங்கேறிய நாள்

ஆழுமை அதிகாரத்தால்
மனித உரிமைகள்
மீறப்பட்ட நாள்

கொலைகார நாய்
இனவெறி நாய் ராஜபக்சே
தமிழினத் தலைவனை
கொன்றதாய் நாடகமாடிய நாள்

--கோபி சேகுவேரா

எழுதியவர் : கோபி சேகுவேரா (17-May-15, 12:05 am)
பார்வை : 605

மேலே