மறந்தான், மறந்தான் மரம் தான் மழைக்கு ஆதாரம் என்பதை...
மறந்தான், மறந்தான்
மரம் தான் மழைக்கு
ஆதாரம் என்பதை
மறந்தான், மறந்தான் மனிதன்.
காடு, நிலம் அழித்தான்,
வேண்டியவை பழித்தான்,
வேண்டாதவை நினைத்தான்,
நோய் நொடி கொண்டு வந்து சேர்த்தான், சேர்த்தான் மனிதன்.
இயற்கையை மாற்றுதல்,
இயல்பை மாற்றுதல்,
இல்லாதவைக்கு ஏங்குதல்
எதற்கும் ஆசைப் படுதல்
என்றே இவை பின்னே
ஓடுகிறான் ஓடுகிறான் மனிதன்.
அவசரம், ஆத்திரம்,
ஆலாய்ப் பறந்து,
பொறுமை மறந்து,
பொல்லாத பணத்தை நினைத்தே,
தள்ளாடுகிறான், தள்ளாடுகிறான் மனிதன்.
அன்பு, பண்பு, அறம்
அத்தனையும் விட்டு
சொத்து, சுகம் என்றே
நாளும்
தடுமாறுகிறான், தடுமாறுகிறான் மனிதன்.
நல்ல ஒரு சொல்லும்,
நயமான ஒரு செயலும்,
தினம் ஒன்று என்று வாழ்பவனே,
கண்ணால் கண்ட,
கண்ணால் கண்ட,
கடவுளுக்கு நிகர் மனிதன்.