திரு ஏடகம் - பாண்டி பதினாங்கு பதிகளில் ஒன்றுமதுரை அருகில்

சிவனவன் திருமேனி
அகம் மகிழும் ஏடகப் பெருமானாய்,
செகம் காக்கும் அன்னையவள்
குலம் காக்கவே ஏலவார்
குழலி அம்மையாய்,
எழுந்தருளி வந்தமர்ந்த இடம்
திருஏடகப் பதியாம்.
கண் காட்டும் திசையெல்லாம்,
காலம் காட்டும் நாயகனாய்,
நித்தம் வழி காட்டும் ஏடகப் பெருமான்.
மண் இருக்குமிடமெல்லாம்,
குணம் தரும் மாதரசி,
நலம் பெருக்கும் பெண்ணரசி,
மாதவப் பொன் மணி,
ஏலவார் குழலி அம்மை.
வைகை நதிக்கறையோரம்,
ஓங்கு வளர் தென்னையோடு,
பாங்கு மிகு மலர் சோலை,
பார்த்தவர் கை தொழும் திருக் கோவில்.
முன்னோர் செய்வித்த தர்மம்,
தலைமுறைகள் தாண்டி ,
காலம் காலமாய் தொடரட்டும்.
சீறார் போற்றி சிவன் தாள் பணிந்து,
அத்தன் உனக்கு பணி என்றும்
செய்திடவே வாழ்வளிப்பாய்.
( திருவேடகம் திருக் கோவில் முகப்பு தோற்றமும், சரஸ்வதி பூஜை நவராத்திரி உற்சவப் புகைப் படங்கள். )

எழுதியவர் : arsm1952 (21-Oct-21, 9:31 pm)
சேர்த்தது : arsm1952
பார்வை : 55

மேலே