வாழ்க்கை

பச்சை என்பது துவக்கம்,
சிவப்பு என்பது நிறுத்தம்,j
மஞ்சள் என்பது தயார் நிலை.
இது வீதி விளக்கின் விதி .
வாழ்க்கை வழிக்கும் இது பொருத்தமென்பேன்.

பச்சை என்பதை கனிவென்று கொண்டு
நாளதைத் தொடங்கு.
சிவப்பு என்ற கோபம் வரும் நேரம்,
செய்தலை நிறுத்தி பின் செயலதைத் தொடங்கு.
மஞ்சள் என்பது மங்கலம் என்றே மனதில் நிறுத்தி,
சோம்பல் தவிர்த்து என்றும் தயார் நிலை கொள்.

எழுதியவர் : arsm1952 (23-Jan-20, 7:26 pm)
Tanglish : vaazhkkai
பார்வை : 384

மேலே