யோகராணி கணேசன்- கருத்துகள்

ம்ம்ம் அவைதான் முதற் கல்வி. சிறப்பு

இந்தப் போட்டியில் பரிசு பெற்ற கவிதை:

கடல் முத்துகளாய் வார்த்தைகள்,

அலைகளாய் பிழைகள் .!

அலைகளை கண்டு கடல் முத்துகளை மறந்தவர்கள் கூறுவது... தான் பிழை.

இதழ்களால் வாசிப்பதை விட்டுவிட்டு இதயத்தால் வசித்து பாருங்கள்,

பிழைகளும் சொல்லும் - பிழை வார்த்தையில் அல்ல உச்சரிப்பில் என்று!

வாழ்த்துக்கள்.

இந்தக் கவிதை பரிசை தட்டிச் செல்கிறது. வாழ்த்துக்கள் :-) உங்கள் வங்கி இலக்கத்தையும் முழுப்பெயரையும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும். பரிசு 1000 ரூபா அனுப்பி வைக்கப்படும். நன்றி

OMG அவரவர் கண்ணோட்டத்திற்கேற்ப பொருளமைத்துக் கொள்ளலாம்! ஆனால் எனது கண்ணோட்டம் வேறு!

ஒரு சொல் பல பொருள் படும் அந்த சொல்லை உள் வாங்குபவர் மன நிலையைப் பொறுத்து
- இங்கு தாய் மொழியும் விதி விலக்கல்ல!

இந்தப் போட்டியில் பரிசு பெற்ற கவிதை விபரம் எப்படி பார்வையிடுவது?

உண்மையான வரிகள்! உரமூட்டூகின்றன!

ஏற்றுக் கொள்கின்றேன். ஆனால் அனுகிரகம் என்பதிலிருந்து “அருட்சக்தி” பிறந்தது என்ற விளக்கம் போதுமானது. உதாரணமாக சங்ககாலப் பாடல்களும், தேவார திருவாசகங்களும் அவற்றை எழுதியவர்களால்த்தான் அதற்கு பொருள் கொடுக்கப்பட்டது. சில பாடல்களுக்குரிய பொருளும் அதன் வசன நடைக்கேற்ப ஊகித்து பாடலாசிரியர் எதைக் கூறவருகின்றார் என்று அறிய முடிகிறது. பல சொற்களும் பொருளும் அவ்வாறுதான் தோற்றம் பெற்றது. என் கவிதைக்கு பொருள் கொடுப்பதுதான் என் கடமை. “அனுசக்தி” என்பது “அருட்சதி” என பொருள்படும் காலம் வரும்! காத்திருப்பீர்!

இலக்கணத்தில் பிரிக்க முடியாத சொற்கள் பிரிக்கக்கூடிய சொற்கள் என்றும் உள்ளதல்லவா? அதாவது பகு சொல், பகா சொல் என இருவகைப்படும். நீங்கள் சொல்வதுபோல் பகுதி,விகுதி, சந்தி, சாரியை என்பன பகுக்கக் கூடிய சொற்களுக்குரியவை. நீங்கள் சொல்லும் டண்ணகரம், தன்னகரம் என்பன ஒரு எழுத்து இன்னொரு எழுத்தோடு இணைந்து ஒரு சொல்லை உருவாக்குவதற்கு உரிய இலக்கண விதி முறை. அனு என்ற சொல் சக்தியுடன் இணைவதில் எந்த பிழையும் இருப்பதாக எனக்குத்தெரியவில்லை. இது ஒரு கவிதை. கவிதைக்கு பொருள் கொடுப்பதென்பது அவரவர் பார்வையிலுள்ளது. உங்கள் பகுத்தறியும் திறனை பாராட்டுகிறேன். ஆரோக்கியமான தமிழ் சிந்தனையாளர். வாழ்த்துக்கள்

உண்மையில் அனுக்கிரகம் என்ற சொல்லில் இருந்துதான் அனு என்ற சொல்லை பிரித்து எடுத்து சக்தியுடன் இணைத்தேன். அனுகிரகம் என்றால் ஆசிபுரிதல், அருள்பாலித்தல் என்பதுதானே பொருள். ஆகவே அனு சக்தி என்பது ஏன் அருள் சக்தியாக இருக்கக் கூடாது. இதை ஏன் ஒரு புதுமைப்படைப்பாக ஏற்றுக் கொள்ளக்கூடாது. உண்மையில் அனு என்ற சொல் ஒரு ஆங்கிலச் சொல். ஆங்கிலத்தில் அதன் பொருள் mercy அதாவது கருணை என்று பொருள்படும்.

கடுகதி என்றால் எக்ஸ்பிரஸ் அதாவது அதிவேக வாகனங்களைக் குறிக்கும். இடையிடையே நிற்காமல் குறிக்கப்பட்ட இடத்தை மட்டும் சென்றடையும். அதுபோல்த்தான் நாமும் ஓய்வின்றி ஓடிக்கொண்டிருக்கின்றோம். அனு என்பது அருள் அல்லது ஆசி என்று பொருள்படும். ஆகவே நம்முடைய ஓட்டம் நன்மைக்கா தீமைக்கா என்பதை நின்று நிதானித்து சிந்திக்க நேரமில்லை என்பதுவே!


யோகராணி கணேசன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.comபுதிதாக இணைந்தவர்

மேலே